பொய்யின்றி அமையாது உலகு
செல்போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு படமாக உருவாகி வருகிறது "பொய்யின்றி அமையாது உலகு'. விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


செல்போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு படமாக உருவாகி வருகிறது "பொய்யின்றி அமையாது உலகு'. விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சக்திவேல் எழுதி இயக்குகிறார். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
வசந்த் இசையமைக்கிறார். "நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக் கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள். அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரஸ்யமான சம்பவங்களுடன் பயணிக்கிறது.
இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற "லவ் டுடே' படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். நகைச்சுவையுடன் கலந்த உணர்வுப்பூர்வமான திரைக்கதையாக இப்படம் வந்துள்ளது'' என்றார் இயக்குநர் சக்திவேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...