

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நிகழாண்டு தரவரிசையில் இல்லாத செக். குடியரசின் மார்கெட்டா வோண்டுரெளஸோவா, ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் சாம்பியன் பட்டங்களை வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
பிரிட்டனின் லண்டன் நகரில் ஆல் இங்கிலாந்து கிளப் மைதானத்தில் விம்பிள்டன் போட்டிகள் ஜூலை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் இல்லாத செக். குடியரசு வீராங்கனை மார்கெட்டா பட்டம் வென்று வியப்பில் ஆழ்த்தினார்.
பார்வையாளர் டு சாம்பியன்: மார்கெட்டா வோண்டுரெளúஸôவா சர்வதேச தரவரிசையில் 42-ஆவது இடத்தில் உள்ள நிலையில், விம்பிள்டன் தரவரிசையில் இடம் பெறவில்லை. செக். குடியரசில் சோகோலோவ் என்ற இடத்தில் 1999 ஜூன் மாதத்தில் பிறந்த அவருக்கு தற்போது 24 வயதாகிறது.
2019-இல் அதிகபட்சமாக 14-ஆவது இடத்தில் இருந்தார். தனது தந்தையுடன் 4 வயது முதல் டென்னிஸ் ஆடி வரும் மார்கெட்டாவின் தாயார் ஜின்ட்ரிஸ்கா ஆன்டர்லோவா செக். குடியரசின் தேசிய வாலிபால் வீராங்கனை ஆவார். ஜாம்பவான் ரோஜர் பெடரரை தனது வழிகாட்டியாக கருதும் மார்கெட்டா 2019 பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இறுதிச் சுற்று வரை வந்து தோல்வி அடைந்தார்.
நிகழாண்டு விம்பிள்டன் ஃபைனலில் துனிசிய வீராங்கனை ஆன்ஸ் ஜபியுருடன் ஆடியதே அவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆகும். 2022 விம்பிள்டன் போட்டியில் மணிக்கட்டு காயம் காரணமாக பார்வையாளராக இருந்து கண்டு களித்தார். ஆனால் நிகழாண்டு போட்டியில் சென்டர் கோர்ட்டில் சாம்பியன் பட்டத்துடன் நின்று சாதனை படைத்தார் மார்கெட்டா.
நடால் நிழலில் வளர்ந்த கார்லோஸ் அல்காரஸ்:
ஆடவர் பிரிவில் சாம்பியன் ஆன ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் அற்புத ஆட்டம், வியக்கத்தக்க சாதனைகளால் புயலை கிளப்பி உள்ளார். உலகின் நம்பர் 1 வீரரான அல்காரஸ், இறுதி ஆட்டத்தில் ஜாம்பவானும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் நோவக் ஜோகோவிச்சை 5 செட் த்ரில்லரில் போராடி வீழ்த்தி முதல் பட்டத்தை கைப்பற்றினார்.
டென்னிஸ் குடும்பம்: ஸ்பெயினின் முர்ஸியா, எல்பால்மர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அல்காரஸின் குடும்பமே டென்னிஸ் பாரம்பரியம் மிக்கது. தாத்தா, தந்தை என இருவரும் டென்னிஸ் ஆடியவர்கள்.
நட்சத்திர வீரர் ரபேல் நடாலின் பால் ஈர்க்கப்பட்டு, தனது டென்னிஸ் திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டார் அல்காரஸ். அவ்வப்போது நடாலுடன், அல்காரûஸ அனைவரும் ஒப்பீடு செய்து வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளானார். 16 வயதிலேயே நடாலுடன் தன்னை ஒப்பிட்டு பேசியபோது, ஒரே ஒரு ஜாம்பவான் அது நடால் தான் என உறுதியாக கூறினார். தனது கடின முயற்சி, உழைப்பால் தற்போதைய நிலையை அடைந்தார்.
விம்பிள்டன் பட்டத்துக்கு முன்பு 2022 மாட்ரிட் மாஸ்டர்ஸ் போட்டியில் ஜாம்பவான்கள் நடால், ஜோகோவிச், அலெக்சாண்டல் வெரேவ் ஆகியோர் வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 2022-இல் யுஎஸ் ஓபனிலும் பட்டம் வென்றுள்ளார் அல்காரஸ்.
2000 சிறப்பு: 2000-ஆண்டுகளில் பிறந்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் வீரர். உலகின் நம்பர் 1 வீரர் அந்தஸ்தை பெற்றவர். முதல் 5 வீரர்களில் ஒருவர் என்ற சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.