பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தயாரிப்பாளரானார் ஜி.வி.பிரகாஷ்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி இயக்கும் படம் "கிங்ஸ்டன்'. ஜீ. வி. பிரகாஷ்குமார்,  திவ்யபாரதி,  ஆண்டனி,  சேத்தன், குமரவேல்,  ஷாபுமோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  

News image
Updated On :22 அக்டோபர் 2023, 1:31 pm

DIN

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி இயக்கும் படம் "கிங்ஸ்டன்'. ஜீ. வி. பிரகாஷ்குமார்,  திவ்யபாரதி,  ஆண்டனி,  சேத்தன், குமரவேல்,  ஷாபுமோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  கோகுல் பினாய் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை திவிக் எழுத, படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள,  சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார். கடற்புர பின்னணியில் திகில் சாகச படைப்பாக  இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜீ. வி. பிரகாஷ்குமார் தயாரிக்கிறார். ஆறுமுகமும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.   இயக்குநர் கமல் பிரகாஷ் பேசுகையில், ""என்னை போன்ற புதுமுக இயக்குநருக்கு "கிங்ஸ்டன்' போன்ற கனவு திரைக்கதையை எழுதி இயக்கும் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. இந்த படைப்பு குறித்த எனது பார்வையை புரிந்துக் கொண்டு முழுமையாக நம்பி வாய்ப்பு வழங்கியதற்காக ஜீ. வி. பிரகாஷ்குமார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியோருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் இதனை சாத்தியமாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என்றார். தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜீ.வி.பிரகாஷ் பேசுகையில்.

தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். "கிங்ஸ்டன்' கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது, உடனடியாக தயாரிக்க முடிவு செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன். எப்போதுமே ஒரு படத்துக்கு ஆரம்ப புள்ளி என்பது மிகவும் முக்கியம். இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் எனக்கு உங்களுடைய அன்பும், ஆதரவும் தேவை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.