பெண்களுக்காக...

இன்றும் எண்ணற்ற கிராமங்களில் ஏராளமான பெண்கள் தங்களது வீடுகளில் கழிவறைகள் இல்லாததால், தங்களது இயற்கை உபாதையைக் கழிக்கச் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
பெண்களுக்காக...
Updated on
1 min read

இன்றும் எண்ணற்ற கிராமங்களில் ஏராளமான பெண்கள் தங்களது வீடுகளில் கழிவறைகள் இல்லாததால், தங்களது இயற்கை உபாதையைக் கழிக்கச் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அரசும் கழிவறைகளைக் கட்டிக் கொடுத்தாலும், சில இடங்களில் கழிவறைகள் இல்லாத சூழல்தான். ஊராட்சி மன்ற நிதியில் கட்ட முடியாதச் சூழலில், நவீன வசதியுடன் கூடிய கழிவறையைத் தனது சொந்த நிதியில் கட்டி கொடுத்துள்ளார் பெரியவரிகம் ஊராட்சி மன்றத் தலைவர் சி.சின்னக்கண்ணன்.

2021- ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மாதனூர் ஒன்றியத்தில் உள்ள பெரியவரிகம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற இவர்தான் சாதனையைச் செய்தவர்.

அவரிடம் பேசியபோது:

' பெரியவரிகம் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல், பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறேன். ஊராட்சி மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்துதருகிறேன்.

ஊராட்சியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலாளர்கள், தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர். நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தோர்தான்.

பெண்களின் நலன் கருதி, பிரத்யேக கழிப்பறையை கட்ட வேண்டும் என்பது பெண்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்துவந்தனர். பெண்கள் சாலையோர மறைவிடங்களிலும், கண்மாய், கானாறு பகுதிகளில் தங்கள் இயற்கை உபாதையை கழிக்கத் தேடிச் செல்ல வேண்டிய அவலமும் இருந்து வந்தது. எந்த நேரமும் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம், வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கையும் இருந்து வந்தது. இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதையறிந்து நான் மன வேதனையுற்றேன். ஊராட்சி நிதியில் செய்துதர முடியவில்லை. இதனால் எனது சொந்த நிதியிலேயே செய்துவிட முடிவு செய்தேன்.

நவீன வசதியுடன் கூடிய பெண்களுக்கான பொது கழிவறையை ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடித்துள்ளேன்.

சுமார் பத்து அடி அகலமும், 27 அடி நீளமும் கொண்டதாக இந்த கழிவறை வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நான்கு கழிப்பறைகள் உள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்துள்ளேன். தற்போது கழிவறை கட்டடம் பயன்பாட்டில் உள்ளது. திறந்தவெளியைக் கழிவறையாகப் பயன்படுத்தும் சூழலைப் போக்கியுள்ளேன்.

தொடர்ந்து சுத்தமாகப் பராமரிக்கும் வகையில், போதிய பணியாளரையும் நியமித்துள்ளேன். என்னைப் பதவியில் அமர்த்திய மக்களுக்கு இது நான் செய்யும் நன்றிக் கடன்'' என்கிறார் கமலக்கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com