முதல் மின்விளக்கு நகரம்...

ஆசியாவிலேயே தெருக்களில் மின்விளக்குகள் நிறுவப்பட்ட முதல் நகரம் என்ற பெருமை கொண்டது பெங்களூரு.
முதல் மின்விளக்கு நகரம்...
Updated on
1 min read

ஆசியாவிலேயே தெருக்களில் மின்விளக்குகள் நிறுவப்பட்ட முதல் நகரம் என்ற பெருமை கொண்டது பெங்களூரு.

கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரில் உள்ள கே.ஆர். மார்க்கெட் பகுதியில்தான் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், முதன் முதலில் தெரு மின்விளக்குகள் எரியத் தொடங்கின.

சிவனசமுத்திரத்தில் உள்ள காவிரி நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, கோலார் தங்கவயல் சுரங்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. அதற்கான மின்சாரக் கட்டமைப்புகள் பெங்களூரு வழியாகச் சென்றன. நீர்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, பெங்களூரு தெருக்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிர்ந்தன,.

இதற்கு முன்னதாக மண்ணெண்ணெய் பயன்படுத்தியே விளக்குகள் எரிய வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com