விஜய் ஆண்டனியின் ஹிட்லர்

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஹிட்லர்'.
விஜய் ஆண்டனியின் ஹிட்லர்
Updated on
1 min read

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஹிட்லர்'. விஜய் ஆண்டனி, ரியா சுமன், கெüதம் வாசுதேவ்மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், தமிழ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "படை வீரன்', "வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களுக்குப் பின் இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் தனா. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""அதிகாரம் என்பது சகல மட்டங்களிலும் நம்மை படுத்தி எடுக்கிறது. 

கோயில்களில், மருத்துவமனைகளில், பள்ளிகளில், சாமானியர்கள் அத்தனை பேரும் காத்திருக்க அதிகாரம் படைத்தவர்கள் முதல் ஆளாக உள்ளே போய் வருகிறார்கள்.  அதிகாரம் படைத்தவர்களின் தூரத்து சொந்தங்களுக்கு கூட பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாடு எப்போதும் அதிகாரம்  உள்ளவர்களுக்கு ஒன்றாகவும், இல்லாதவர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. ஒரு நடிகைக்காக அடித்துக் கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த போலீஸýம் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில். ஆனால், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பொரி கடலை விற்கும் கிழவனை கொண்டு போய் ராத்திரியெல்லாம் ஸ்டேஷனில் உட்காரவைத்து துன்புறுத்தும்.  நேற்று வரை ஒன்ரையணாவுக்கு  பெறாதவர்கள், கவுன்சிலர் ஆனதில், எம்.எல்.ஏ. ஆனதில்.... கார், அடியாள்கள், செல்வாக்கு என பறக்கிறார்கள்... 

எல்லாவற்றையும் சாமனியன் சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்படித்தான் இந்தக் கதையின் உள்ளே போனேன். 

உங்களுக்கு இது வேறு அனுபவத்தை தரும். அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படத்தின் கரு'' என்றார் இயக்குநர்.  விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்துக்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com