கே .ஜே. பி. டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் "ஹாட் ஸ்பாட்'.
கலையரசன், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விக்னேஷ் கார்த்திக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். சிக்ஸர் என்டெர்டைன்மெண்ட் சார்பில் தினேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...
""சாப்பாடு, சம்பளம், சந்தோஷம் எனக் கிடைக்கிற வாழ்வு, எல்லோருக்கும் எப்போதும் அமைவது இல்லை. அப்படி கிடைத்தாலும் கனவு, லட்சியம், வேட்கை என துரத்தும் இந்த வாழ்வில் ஒரு கட்டத்தில் எங்கோ போய் விடுகிறோம். மனித மனம் எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலேயே கடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அடைய வேண்டியவற்றை அடைந்து விடுகிறது. இனி அடைய வேண்டி ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு சொல்கிறவர்களை கூட நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் அடைந்து விட்டோம், என்ற நிலைக்கு வந்த பின்னர்தான், இங்கே பிரச்னைகளே துளிர் விடுகின்றன. பணம் பிரச்னை இல்லை என்கிற போது மனம் பிரச்னையாகி விடுகிறது. எல்லாம் அடைந்த பின் அன்புக்கு ஏங்குகிறோம். வன்மம் இல்லா உலகை அடைய தவிக்கிறோம். சந்தோஷங்களுக்கு காத்திருக்கிறோம். எப்போதும் பரிசுத்தமான காதலுக்குப் பரிதவிக்கிறோம். ஒரு கணமும் மறு கணமுமாக மாறுவதுதான் மனித மனம். அப்போது உணரும் ஒரு தனிமைதான் நாம் யார் என்று உணர வைக்கும். அப்படி உணர்ந்த ஒரு சங்கதிதான் இந்த கதை. பணம், பொறாமை எல்லாவற்றையும் கடந்து நிலைத்து நிற்பது அன்பும், மனிதநேயமும்தான் என்று உணர வைக்கும் களம். பின்னணியில் ஒரு நிஜ சம்பவமும் இருக்கிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.