ஸ்டார்ட் 1, 2, 3...

'தொடக்கக் காலத்தில் ஸ்பான்சர்கள் இல்லாமல் சதுரங்கத்தில் எனது கனவை நனவாக்குவது சவாலாக அமைந்தது.
ஸ்டார்ட் 1, 2, 3...
Published on
Updated on
2 min read

சக்கரவர்த்தி

'தொடக்கக் காலத்தில் ஸ்பான்சர்கள் இல்லாமல் சதுரங்கத்தில் எனது கனவை நனவாக்குவது சவாலாக அமைந்தது. போட்டிகளில் பங்கெடுக்க பல நாடுகளில் பயணிக்க வேண்டியிருந்தது. பயணச் செலவுக்காகவே நான் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தேன்.

அதிர்ஷ்டவசமாகத் தொடர்ந்து வெற்றி பெற்றுகொண்டிருந்தேன். வெற்றிகளினால் கிடைத்த பரிசுத் தொகை எனது பயணச் செலவுகளுக்கு உதவியது. ஆட்டத்தில் சில தவறுகள் செய்தேன். அவை, கொனேறு அக்காவுக்குச் சாதகமாக மாறியது. நான் தவறுகள் செய்யவில்லை என்றால் எளிதாக வெற்றி பெற்றிருப்பேன். இது ஒரு ஆரம்பம்தான் என்று நம்புகிறேன்' என்கிறார் சதுரங்க சாம்பியன் திவ்யா.

சர்வதேசப் போட்டிகளில் ஒரே நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் இறுதி போட்டியில் மோதிக் கொள்வது அரிது. அப்படியொரு போட்டிதான் மூன்றாவது 'ஃபிடே' பெண்கள் உலகக் கோப்பை சதுரங்கப் போட்டியாகும். ஜார்ஜியா நாட்டின் பதுமியில் ஜூலை 28-இல் நடைபெற்ற போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் முப்பத்து எட்டு வயதான கோனெரு ஹம்பி , பத்தொன்பது வயதான திவ்யா தேஷ்முக் ஆகிய இருவரும் மோதினர்.

கிளாசிக்கல் அடிப்படையில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. 2-ஆவது போட்டி ஜூலை 28-இல் நடைபெற்றது. வெள்ளைநிற காய்களுடன் ஆடிய ஹம்பி தனது 34-ஆவது நகர்த்தலில் திவ்யாவுடன் டிரா செய்தார். இருவருக்கும் தலா அரை புள்ளிகள் கிடைத்தன. இரண்டு போட்டி ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் இருந்தனர்.

வெற்றியாளரை தீர்மானிக்க 'டைபிரேக்கர்' முறையில் போட்டி நடைபெற, திவ்யா வெற்றி பெற்று 'சாம்பியன்' பட்டம் வென்றார். இதன்மூலம் பெண்கள் செஸ் 'ஃபிடே' உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்தார். கோனெரு ஹம்பி, இரண்டாவது இடத்தில் இருப்பதால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

'இனி ஆடியும் பயனில்லை' என்று தெரிந்தவுடன், ஹம்பி ஆட்டத்தை நிறுத்தி திவ்யாவைப் பாராட்டும் விதமாக கை குலுக்கினார். சற்றும் எதிர்பாராத அந்த கணத்தில் திவ்யாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். விளையாட்டு விதிமுறைகளை முடித்துவிட்டு, வெளியே காத்திருந்த தனது தாயின் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

திவ்யாவுக்கு ஐம்பதாயிரம் டாலர்களும் (சுமார் நாற்பத்திரெண்டரை லட்சம் ரூபாய்), ஹம்பிக்கு 35 ஆயிரம் டாலர்களும் (சுமார் 30 லட்சம் ரூபாய்) கிடைத்தன. இந்த வெற்றியால் திவ்யாவுக்கு 'கிராண்ட் மாஸ்டர்' என்ற பட்டம் கிடைத்துள்ளது. இதனால் ஹம்பி, வைஷாலி, ஹரிகா துரோணவள்ளியைத் தொடர்ந்து நான்வது பெண் வீராங்கனை ஆகிறார் திவ்யா.

சென்னையில் பயிற்சி பெற்றவர் 2005 டிசம்பர் 9-இல் நாக்பூரில் பிறந்த, திவ்யாவுக்கு உலகத் தரவரிசையில் 905-ஆவது இடம் கிடைத்துள்ளது. திவ்யாவின் அண்மைய சாதனை அவரை இந்தியாவின் 88-ஆவது கிராண்ட்மாஸ்டராக ஆக்குகிறது. பிரக்ஞானந்தா பயிற்சி பெற்ற சென்னை செஸ் குருகுலத்தில், குரு ரமேஷிடம் பயிற்சி பெற்றவர் திவ்யா. திவ்யாவின் பெற்றோர் மருத்துவர்கள்.

இவரது மூத்த சகோதரியின் பூப்பந்து விளையாட்டில் சேர்ந்தபோது விளையாட்டுகளில் ஈர்க்கப்பட்ட திவ்யா, தனது ஐந்தாம் வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினார்.

2012-இல் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார். 2014, 2017-ஆம் ஆண்டுகளிலும் அந்தந்த வயதுக்கு உள்பட்டோர் பிரிவுகளில் வெற்றி பெற்றார். 2023-இல் திவ்யா சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.

2024-இல் இருபது வயதுக்குள்பட்டோர் பிரிவில் உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன் ஆனார். புடாபெஸ்டில் 2024-இல் நடைபெற்ற 45-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் அணி தங்கப் பதக்கம் பெற்றதில் திவ்யாவின் பங்களிப்பும் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com