நேர மாறுதல்

இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்கள், தொலைதூரப் பகுதிகள் தனித்தனி நேரம் கேட்கின்றன.
நேர மாறுதல்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்கள், தொலைதூரப் பகுதிகள் தனித்தனி நேரம் கேட்கின்றன. அங்கெல்லாம் சூரியன் நான்கு மணிக்கே வந்து விடுகிறது. அங்கு பத்து மணி அலுவலகம் என்பது பாதி நாள் முடிந்தது போல் உள்ளது. மாலையில் சீக்கிரம் இருட்டி விடுகிறது.

இதனால், "எங்களுக்கு தனி நேரம் வேண்டும்' என கேட்கின்றனர். அதனால் குழப்பமே மிஞ்சும் என இந்திய அரசு இன்று வரை மறுத்து வருகிறது. ஒரே நேர முறையைக் (ஐ.எஸ்.டி.) கையாண்டு வருகிறது. ஆனால், பல நாடுகள் தங்களுடைய நேரத்தை ஒரே நேரமாக வைத்திருந்தாலும் சில நாடுகள், அவற்றின் விரிந்த

எல்லைக்கு ஏற்ப ,பல நேர மாற்றங்களை கொண்டுள்ளன. அந்த நாடுகள் எவை, ஏன்?

பிரான்ஸ்: 12 வித்தியாசமான நேரங்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ் மெயின் நாட்டுக்குள் ஒரே நேரம்தான். ஆனால் பிரான்ஸூக்கு அதன் எல்லைக்கு வெளியே, 11 நாடுகள் உள்ளன. அவற்றில் அங்குள்ள சூழலுக்கேற்ப நேரம் கடைபிடிக்கப்படுகிறது.

இதற்கு பாலனேசியா, வாலிஸ் & புருணா, செயின்ட் மியர் மிக் லோனி, டஹட்டி, மார்க் வேசாஸ், கேம்பியர், ஈஸ்டர் தீவு, பிரெஞ்சு கயானா, நியூகாலடோனியா, வாலிஷ் & ப்யூட்டோனியா, பியர்ரி & மிக்லான் போன்ற பகுதிகளில் ஆளுமை உள்ளன. இதனால் பிரான்ஸýக்கு 12 நேரக் காலங்கள்.இது ஒரு கின்னஸ் சாதனையாகவும் ஏற்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா: அமெரிக்காவுக்கு உள்ளேயே 9 நேர மாற்றங்கள் உள்ளன. இதுதவிர, ஹோய்லாந்து, பேகர் தீவுகள் என இரண்டு எல்லைப் பகுதிகள் வெளியில் இருந்தபடி இரு தனி நேரங்களைப் பராமரிக்கின்றன.

ரஷியா: 11 நேர மாறுதல்களைக் கொண்டுள்ளது. 2018 வரை மாஸ்கோ நேரமே ரஷியா முழுவதும் பின்பற்றப்பட்டது. இன்று அதன் ரயில் நேரம் அந்தந்த பகுதி நேரங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டு விட்டன. இது விமானங்களுக்கும் பொருந்தும்.

ஆஸ்திரேலியா: 9 தனி நேரங்களைக் கொண்டுள்ளன. ஆறு நேரங்கள் ஆஸ்திரேலியாவுக்குள் தனித்தனியாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் லார்ட் ஹோவ் தீவு, நோர்போக் தீவு , கிறிஸ்துமஸ் தீவு போன்றவை தனித்தனி நேரங்களைக் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் (யூ.கே.): 9 தனித்தனி நேரங்களைக் கொண்டுள்ளது. யு.கே.வுக்குள் ஒரே நேரம்தான். ஆனால் அதன் வெளிப் பகுதிகளான பெர்முடா மாண்டிஸ்டிரேட், கில்பர்ட்டர், பால்க்லாந்து, தெற்கு ஜார்சியா, பிடகெயின், கேமன் தீவு,பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் ஆகியவை தனி நேரத்தை பராமரிக்கின்றன.

மற்ற நாடுகள்: கானா-6, டென்மார்க்-5, நியூஸிலாந்து-5, பிரேசில்-4, மெக்சிகோ -4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com