திரைக்கதிர்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
திரைக்கதிர்
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களுக்கு சினிமாவில் வாசல் கதவைத் திறந்து வைத்த கே. பாலசந்தருக்கு கடந்த 23-ஆம் தேதி 11-ஆவது நினைவு நாள். இந்நிகழ்வையொட்டி அவர் குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

'உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை' எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் பாலசந்தர் அவர்களுக்கும், அவரது தோழர் நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும். இன்று கே.பி. சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல. 'இந்த இயக்குநர் உனக்கு எனக்குப் பின் நீ படிக்க நல்ல இடம்'என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்'' என்று அதில் சொல்லியிருக்கிறார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார். இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

அதில், ' சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்கு நீ சிறந்த விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் வெளிப்பாடுதான் இந்தக் கடிதம். கடந்த 25 வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது... நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை, அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல; திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார் பாலா.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' படத்தில் தீபிகா படுகோன் தற்போது நடித்து வருகிறார். மற்றொரு பக்கம் அட்லி - அல்லு அர்ஜுன் இயக்கும் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்துக்கு கமிட்டாகியிருக்கிறார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. தாயான பிறகு அவர் தனக்கு ஏற்பட்ட கடமைகள் குறித்தும், அவரிடம் அவர் மாற்றிய விஷயங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் தீபிகா படுகோன்.

SWAMINATHAN

'தாயான பிறகு பல புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. என்னிடம் பொறுமையும் அதிகமாகியிருக்கிறது எனச் சொல்லலாம். தாய்மை என்னை கம்பர்ட் úஸôனிலிருந்து வெளியே தள்ளி, சமூகமயமான நபராக மாற்றுகிறது. இந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்டை தல' திரைப்படம் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெற்றிபெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அருண் விஜய், 'நான் நடித்துள்ள 'ரெட்டை தல' திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்காக சேலத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தோம். நல்ல திரைப்படங்களை திரையரங்குக்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகளவில் உள்ளதால், திரையரங்குக்குக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு நல்ல படங்களை எடுக்கும் கடமை தங்களுக்கும் உள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com