
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிறைவுப் பெற்றாலும், அதன் தாக்கம் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் இப்போதும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில், பார்வையாளர்களால்அதிகம் தேடி ரசிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியாளர்களை அறிவோம்.
அயர்லாந்தைச் சேர்ந்த சோபி பெக்கர், ஓட்டப்பந்தய வீரர். இதுவரை மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரராகத் திகழ்ந்தவர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் பின்னர், சமூக ஊடகங்களில் மந்திரப் புன்னகைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கிறார்.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த யூலியா லிவ் சென்கா உயரம் தாண்டுதல் வீராங்கனை. இவர் தனது வசீகரமான அழகால், எண்ணற்றோரின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்டார் இவர் பாரீஸ் ஒலிம்பிக்ஸில் தோன்றிய நாள்முதல் கூகுள் தேடலில் இவரது பெயர் ஹிட்டாகிவிட்டது. இவரது பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், எக்ஸ் பக்கங்களைத் தேடி இவரது புகைப்படங்களை ரசிக்கும் கூட்டம் உண்டு.
ஜெர்மனி நாட்டு தடகள வீராங்கனையான அலிசா சஷ்மிட், பாரீஸ் ஒலிம்பிக்ஸ் உலகின் கவர்ச்சியான தடகள வீராங்கனையாக இருந்தார். இவரை 'வேர்ல்ட் செக்ஸியஸ்ட் அத்லட்' என ஒலிம்பிக் கிராமத்திலேயே புகழ்ந்திருந்தனர். அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வரை இவரே கவர்ச்சியான வீராங்கனையாக வலம் வர இருக்கிறார்.
தொடர் ஓட்டப் பந்தயத்தில் பட்டையைக் கிளப்பிய லைக்கீ, அழகான மாடல் போலவே அண்மைக்காலமாக உலா வருகிறார்.
பாராகுவே நாட்டைச் சேர்ந்த வீராங்கனையான லவ்னா அலோன்சா, பாரீஸ் ஒலிம்பிக்ஸில் கவர்ச்சிக்கன்னியாகவே இருந்தார். நீச்சல் வீராங்கனை என்பதால், இவரது புகைப்படங்கள் இலைஞர்களிடையே எப்போதும் வைரலாக இருக்கிறது.