விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

உண்மை சம்பவ பின்னணியில்....

'பிக் பாஸ்' முகேன் ராவ், பாவ்யா திரிகா முதன்மை வேடங்களில் நடிக்கும் படம், 'ஜின் தி பெட்'.

News image
Updated On :25 ஜனவரி 2025, 6:30 pm

DIN

'பிக் பாஸ்' முகேன் ராவ், பாவ்யா திரிகா முதன்மை வேடங்களில் நடிக்கும் படம், 'ஜின் தி பெட்'. இதில் பால சரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி என பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை டி.ஆர். பாலா இயக்கியுள்ளார்.ஃபேரிடேல் பிக்சர்ஸ், ஏஆர் டூரிங் டாக்கீஸ், விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை டி.ஆர்.பாலா, அனில் குமார் ரெட்டி தயாரித்துள்ளனர். இணைத் தயாரிப்பு வெங்கடாச்சலம். படம் பற்றி இயக்குநர் டி.ஆர்.பாலா கூறும்போது, 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாகக் கொண்டு இதன் கதை நடக்கிறது.

இதில் இடம்பெறும் 'ஜின்' என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்த கதாபாத்திரம் சுமார் 40 நிமிடம் இடம் பெறுகிறது. எட்டு மாதமாக உழைத்து இக்கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறோம். ரசிகர்களுக்கு அது புது அனுபவத்தைத் தரும். திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்த படமாக உருவாகி வருகிறது.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாக கொண்டு கதை நடக்கிறது. ஜின் பாத்திரம் அனைவரையும் கவரும். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க, அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு வி எஸ் தினேஷ் குமாரும், பாடல் வரிகளுக்கு விவேகா, கு.கார்த்திக் மற்றும் விஷ்ணு எடவனும், சண்டைக்காட்சிகளுக்கு பேன்தோம் பிரதீப்பும் பொறுப்பேற்றுள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டிமா பாடல் இணையத்தில் ஏற்கெனவே ஹிட் அடித்துள்ளது. இப்படத்தின் முன்னோட்டத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டியுள்ளனர்' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.