
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் 'தேசிய ஸ்பெல்லிங் பீ' எனும் ஆங்கில வார்த்தைத் திறன் போட்டியின் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றபோது, ஹைதராபாத்தைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ஃபைசான் சாகி என்ற பதிமூன்று வயது மாணவன் சாம்பியனாகி இருக்கிறார். இதற்காக, 50 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் இது 42 லட்சம் ரூபாய்) பரிசு கிடைத்தது.
Éclaircissement (தமிழ் உச்சரிப்பு : ஏக்லைர்சிஸ்மா) என்ற மிகவும் கடினமான வார்த்தைக்குரிய எழுத்துகளை மிகச் சரியாகச் சொல்லி, விருதை வெற்றிருக்கிறார் ஃபைசான் சாகி. இந்த வார்த்தைக்கு 'விளக்கமளித்தல்' என்று அர்த்தம்.
போட்டியில் எட்டு வயது முதல் 14 நான்கு வயது வரையிலான மாணவ, மாணவிகள் 234 பேரில் ஒன்பது பேர் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்கள். 16 சுற்றுகளில் பங்கேற்றார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஃபைசான் இந்த ஆண்டு சாம்பியன் ஆனார்.
'ஃபைசான் சாகி ஏழாம் வகுப்பில் படிக்கிறார். எனது குடும்பத்தில் ஓய்வு நேரத்தில் எல்லோரும் ஆங்கில வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லும் விளையாட்டு விளையாடுவது வழக்கம். தனது ஏழாவது வயதில் விளையாட்டாக ஆர்வம் தொடங்கியது. சிறு வயது முதலே புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதில் ஃபைசனுக்கு அதீத ஆர்வம் உண்டு' என்கிறார் அவனது அம்மா ஆர்ஷியா கத்ரி.
'அவனுடைய ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அவனுக்கு இப்படி ஒரு போட்டியில் பங்கேற்கும் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போட்டியில் பங்கேற்கச் செய்தோம். இறுதிச் சுற்று வரை வந்து கடைசியில் சாம்பியனாகவும் ஆகிவிட்டதை எங்களால் நம்பவே முடியவில்லை' என்கிறார் ஃபைசானின் அப்பா சாகி அன்வார்.
போட்டி குறித்த மேலும் சில சுவையான தகவல்கள் :
1925-இல் போட்டி தொடங்கப்பட்டபோது, 9 மாணவர்களே பங்கேற்றனர். ஃப்ரன்க் நியூஹுசர் என்ற 11 வயது மாணவன் வெற்றி பெற்றார்.
1926இல் பாலின் பெல் என்ற மாணவி சாம்பியன் ஆனார்.
1985-இன் சாம்பியன் இந்திய வம்சாவளி அமெரிக்க மாணவன் பாலு நடராஜன்.
டெக்ஸாஸ் மாகாண மாணவர்கள்தான் இதுவரை அதிகபட்சமாக 17 முறை சாம்பியனாகி உள்ளனர். அடுத்த இடம் ஒஹையோ (9) மூன்றாமிடம்: பென்சில்வேனியா (8)
இந்தப் போட்டியை மையமாக வைத்து அமெரிக்காவில் நாவல்கள், நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன.
ஸ்பெல்லிங் பீ சாம்பியன்கள் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கனடா, ஜெர்மனி, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மாணவர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.