வால் ஸ்ட்ரீட்டில்...

அமெரிக்காவில் ஒரு இந்தியத் திருமணத்தின் மாப்பிள்ளை அழைப்புக்காக எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் சாலையை வாடகைக்கு எடுத்து, போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.
வால் ஸ்ட்ரீட்டில்...
Updated on
1 min read

அமெரிக்காவில் ஒரு இந்தியத் திருமணத்தின் மாப்பிள்ளை அழைப்புக்காக எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் சாலையை வாடகைக்கு எடுத்து, போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். அந்தச் சாலை நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் 'வால் ஸ்ட்ரீட்' .

இந்தச் சாலை அமெரிக்க வர்த்தகத் துறையின் உயிர்நாடி. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் உள்ளிட்ட பிரபல வங்கிகளும், நியூயார்க் பங்குச் சந்தை உள்ளிட்ட பெரிய நிதி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் இங்கு செயல்படுகின்றன. இங்கு விடுமுறை நாள்களிலும் நியூயார்க்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகுந்திருக்கும்.

அமெரிக்காவாழ் இந்தியர்கள் வருண் நவானி - அமன்தா úஸால் திருமணம் மே 25-இல் நியூயார்க்கில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்துக்கு முந்தைய நாள், அதாவது, மே 24-இல் (சனிக் கிழமை) 'பாராத்' எனப்படும் 'மாப்பிள்ளை அழைப்பு' நிகழ்ச்சிக்காக 'வால் ஸ்ட்ரீட்'டில் சுமார் 400 பேர் கூடி ஆடல் பாடல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக, 28 வகையான அனுமதி பெறப்பட்டன. இதற்காக, 66 ஆயிரம் டாலர் (56 லட்சம்) வரை கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com