சாதனைப் பெண்...
அமெரிக்காவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த இருபத்து இரண்டு வயது கிருஷ்ணா ஜெயசங்கர் நிவேதா சாதனையைப் படைத்துள்ளார்.
நியூ மெக்ஸிகோ அப்புக்யூர்க்யூவில் அண்மையில் நடைபெற்ற தேசிய உள்ளரங்கு குண்டு எறிதல் போட்டியில், 16.03 மீட்டர் தூரம் தூக்கி எறிந்து ஒரு சாதனையை செய்தார். இதன் மூலம் அவர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒரு இந்திய பெண் குண்டு எறிதலில் செய்துள்ள புதிய சாதனையாகும்.
ஏற்கெனவே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பூர்ணிமா ராவ் 2023-இல் 15.54 மீ. எறிந்து சாதனையைப் புரிந்திருந்தார். அதனை தற்போது கிருஷ்ணா ஜெய்சங்கர் முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை மியா லென்சர் 19.02 மீட்டர் தூரம் தூக்கி எறிந்து பெற்றார். வெள்ளிப் பதக்கத்தை கேபி மோர்ன்ஸ் 17.09மீட்டர் எறிந்து பெற்றார்.
கிருஷ்ணாவின் பெற்றோர் ஜெயசங்கர் மேனன், பிரசன்னா ஆகியோர் முன்னால் சர்வதேச கூடைப் பந்து வீரர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.