இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகை அவ்னீத் கௌரின் புகைப்படத்தை 'லைக்' செய்த விராட் கோலி சர்ச்சைக்கு உள்ளானார். தொடர்ந்து, அவ்னீத் கௌரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து சுமார் 3. 20 கோடியாக உயர்ந்துள்ளது. அவ்னீத் கௌரும் 12 புதிய பிராண்ட் ஒப்பந்தங்களைப் பெற்றதோடு, அவரது 'பிராண்ட்' மதிப்பு 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்திய பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல். 2025) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிக்காக தற்போது விளையாடி வரும் இந்திய நட்சத்திரம் விராட் கோலி அண்மையில் பாலிவுட் நடிகை அவ்னீத் கௌரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து 'லைக்' செய்துவந்தார்.
'அழகான நடிகை அனுஷ்கா சர்மா மனைவியாக இருக்கும்போது கோலி எப்படி இன்னொரு அழகிக்கு லைக் போடலாம்' , 'அனுஷ்காவிடம் கோலிக்கு ஈர்ப்பு குறைந்துவிட்டதா?'.. என்று கோலியின் ரசிகர்கள் பதிவுகளைத் தொடர்ந்தனர். அனுஷ்கா சர்மாவை 'டேக்' செய்து சிலர் பதிவுகளைப் பரப்பினர்.
நிலைமை திசை மாறுவதை உணர்ந்த கோலி , 'வேறு பதிவு ஒன்றை அழிக்கும்போது, தவறுதலாக லைக் விழுந்திருக்கலாம். இதன் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இல்லை. தேவையற்ற அனுமானங்களை உருவாக்க வேண்டாம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆகையால் இந்த லைக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.
விராட் கோலியின் 'லைக்'குக்குப் முன்பு ஒரு 'இன்ஸ்ட்டா' பதிவுக்கு ரூ.2 லட்சம் பெற்றுகொண்டிருந்தார் அவ்னீத் கௌர். தற்போது ஒரு பதிவுக்கு ரூ. 2.6 லட்சம் பெறுவதால், வருமானம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அவ்னீத் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரபலமாகியுள்ளார். இதோடு அவ்னீத் கௌர் யாரென்று இணையத்தில் பலர் தேடவும் தொடங்கிவிட்டனர்.
பஞ்சாப் ஜலந்தரில் பிறந்த அவ்னீத் கௌருக்கு 23 வயதாகிறது. . 'ஸீ' டி.வி.யின் 'டான்ஸ் இந்தியா டான்ஸ்' நிகழ்ச்சியால் அறிமுகமானார். 'மேரி மா' ஹிந்தி திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். 'சாவித்ரி'- ஏக் பிரேம் கஹானி' , 'ஏக் முட்டி ஆஸ்மான்', 'சந்திர நந்தினி', 'அலாவுதீன் - நாம் தோ சுனா ஹோகா' போன்ற சின்னத் திரை நிகழ்ச்சிகளில் தோன்றினார்.
வெள்ளித் திரையில், அவ்னீத் 'மர்தானி' மூலம் அறிமுகமானார். 'கரீப் கரீப் சிங்கிள்', 'மர்தானி 2', 'சிடியாகானா', 'லவ் கி அரேஞ்ச்ட் மேரேஜ்' போன்ற படங்களில் நடித்தார். நவாசுதீன் சித்திக் ஜோடியாக 'டிக்கு வெட்ஸ் ஷெரு'வில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.