சாதனைப் பெண்கள்...

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட உடுப்பியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீக்ஷா, தொடர்ச்சியாக 216 மணி நேரம் மேடையில் பரதநாட்டியம் ஆடினார்.
சாதனைப் பெண்கள்...
Published on
Updated on
1 min read

பரத நாட்டியத்தில் புதிய சாதனை...

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட உடுப்பியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீக்ஷா, தொடர்ச்சியாக 216 மணி நேரம் மேடையில் பரதநாட்டியம் ஆடினார்.

மங்களூருக்கு அருகேயுள்ள மணிபாலில் அண்மையில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் அவர் கூறியது:

'ஆடும்போது ஒவ்வொரு மூன்று மணிக்கு 15 நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம். ஆடும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம். 216 மணி நேரம் நடைபெற்ற பரத நடனத்தை 9 நாள்களில் ஆடி முடித்தேன். நடனம் ஆடத் தொடங்கிய ஓரிரு நாள்களில் கால் விரல்கள், பாதங்கள் வீங்கி விட்டன. மருந்து

களைப் போட்டுக் கொண்டு ஆடி முடித்தேன். நிகழ்ச்சி ஆகஸ்ட் இறுதியில் நடந்தாலும், 'கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்' டில் அண்மையில்தான் இடம் பெற்றது'' என்கிறார் தீக்ஷô.

பெண் உருவத்தில்...

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக அல்பேனியா நாட்டில், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ. ) கேபினட் அமைச்சராக டியெல்லா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அல்பேனியா பிரதமர் எடி ராமா பேசும்போது, 'ஒரு நாள் நாட்டில் டிஜிட்டல் பிரதமர், அமைச்சரும்கூட நிர்வாகத்தில் வரலாம். அந்த நாள் இவ்வளவு விரைவாக வரும் என்று யாரும் நினைத்ததில்லை'' என்றார்.

பின்னர், மனிதராக அல்லாத ஒரே உறுப்பினரான டியெல்லாவை ராமா அறிமுகம் செய்து வைத்தார். அவ்வாறு அறிமுகப்படுத்தியபோதுதான், 'டியெல்லா உடல் ரீதியாக மனிதர் அல்லாத செயற்கை நுண்ணறிவால் பெண் உருவத்தில் இயங்கும் கணினி' என்று சக அமைச்சர்கள் அறிந்தனர்.

'டெண்டர்கள் குறித்த முடிவுகள் அமைச்சகங்களிலிருந்து தருவிக்கப்பட்டு டியெல்லாவிடம் பரிசீலனைக்கு ஒப்படைக்கப்படும். டெண்டர் ஏற்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதா? என்று டியெல்லா ஆய்வு செய்து முடிவுகளைச் சொல்லும். இதனால் ஊழல் நடப்பது குறையும். இது அறிவியல் புனைக்கதை அல்ல. டியெல்லா தன் கடமையைச் சரிவரச் செய்யும்'' என்று ராமா உறுதி தந்துள்ளார்.

'டியெல்லாவின் செயல்பாடுகள் லஞ்சம், அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதுடன் கண்காணிக்கவும் உதவும். அதனால் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்கும்' என்று மக்களும் நம்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com