பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

31 ஆண்டுகளுக்குப் பிறகு...

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-ஆவது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:10 am IST

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-ஆவது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். விறுவிறுப்பான கதையான இதில் 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு , சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள். ரக்ஷன், நம்ரிதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களைச் சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு ஓர் உணர்வுபூர்வமான குடும்பக் கதையாக இத்திரைப்படம் அமைகிறது. சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கும் இப்படத்தின் படத்தொகுப்பை ஆர். நிர்மல் கையாளுகிறார்.

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, சுகன்யா, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கும் 'மேரிகோல்ட்' திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.