உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

புதுப்பொலிவு பெற்ற குளம்...

கோயில் குளங்கள் என்பவை ஊருக்குப் பொதுவானவை. இந்தக் குளங்களின் நீர், அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள கிராமத்துக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம்.

இன்று...

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:27 pm IST

கோயில் குளங்கள் என்பவை ஊருக்குப் பொதுவானவை. இந்தக் குளங்களின் நீர், அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள கிராமத்துக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம். ஆனால், நகர விரிவாக்கத்தாலும், கோயில் புறக்கணிக்கப்படுவதாலும் குளங்கள் பாழடைந்து, வற்றி, மேடுற்று, சில நேரங்களில் ஆக்கிரமிப்புக்கு இலக்காகி, மெல்ல காணாமல் போய்விடுவதே வழக்கமாகி வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறவிருந்த சுங்குவார்சத்திரம் பிள்ளையார் கோயில் குளம் அண்மையில் புனரமைக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சியில், ஹுண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதிப் பங்களிப்புடனும், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பிலும் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோயில் குளம், இப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்தக் குளம் 130 மீட்டர் நீளம், 70 மீட்டர் அகலம் மற்றும் 12 மீட்டர் ஆழம் கொண்ட பாரம்பரிய நீர்நிலையாகும். குளம் தூர்ந்துபோய், இதன் நீர் வரத்து அமைப்புகள் அனைத்தும் மண்மூடியதில் குளத்தின் நீர் அளவு குறையத் தொடங்கியது. குளத்தில் இருந்து நீர் வெளியேறும் வாய்க்கால்களும் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதனால் குளத்துநீர் தேங்கிப் பாசிப்படர்ந்து கிடந்தது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரிப்பின்றி இருந்த இக்குளத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, முழுமையாகத் தூர்வாரப்பட்டது. குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் வெளியேற்று வழிகள் சீரமைக்கப்பட்டன.

இந்தக் குளம் புனரமைப்புக்கு ஹுண்டாய் முன்வந்து நிதியுதவி தந்ததும், எக்ஸ்னோரா பொறுப்பேற்று, புனரமைப்பை தொடங்கியது. நீண்டகால அடிப்படையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், அப்பகுதியின் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்தல், கிராமப்புற மக்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் நல்வாழ்வு மையமாக மாற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு திட்டத்தைச் செயல்படுத்தினர்.

அன்று

அன்று

குளத்தைச் சுற்றி நடைபாதை, பாதுகாப்புத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு பசுமை நிலப்பரப்பாக மாற்றப்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் வகையில் திறந்தவெளி உடற்பயிற்சிச் சாதனங்கள் மற்றும் ஓய்வெடுக்க பூங்கா இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலான பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு இந்தக் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.

ஒரு கோயில் குளம் மீட்கப்பட்டது என்பதைக் காட்டிலும் காப்பாற்றப்பட்டது என்பதே சரியாக இருக்கும்!

-ஆர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.