கண்களைக் கவரும் கலா பூமி

ஒடிஸ்ஸாவின் தலைநகரான புவனேசுவரத்தில் உள்ள 'கலா பூமி', மாநிலத்தின் தலைசிறந்த கைவினைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகமாகும்.
கண்களைக் கவரும் கலா பூமி
Updated on
2 min read

ஒடிஸ்ஸாவின் தலைநகரான புவனேசுவரத்தில் உள்ள 'கலா பூமி', மாநிலத்தின் தலைசிறந்த கைவினைஞர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகமாகும். இதன் உள்ளே நுழைவது, ஒடிஸ்ஸாவின் ஆன்மாவின் உயிருள்ள காப்பகத்தில் நுழைவது போன்ற பிரமிப்பை அளிக்கும். 12.68 ஏக்கரில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை 2018-ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். நுழைவுக் கட்டணம் 50 ரூபாய்.

எட்டுக் காட்சியகங்கள், திறந்தவெளி திரையங்கம், பட்டறை பகுதி, நினைவுப்பொருள்கள் விற்பனைப் பகுதி எனப் பல்வேறு அரங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. காட்சிப் பகுதி, நேரடிப்பகுதி என இரு பிரிவுகளாக உள்ளன. காட்சிப் பகுதியானது மாநிலம் முழுவதிலிருந்து வரும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பற்றிய காட்சிகளைக் கொண்டிருக்கும்.

நேரடிப் பகுதியானது திறந்தவெளி அரங்கம், தனித்தனிப் பட்டறை மண்டலங்களைக் கொண்டது. பல ஒடிஸ்ஸாவின் நினைவுச் சின்னங்களை நினைவுபடுத்தும் லேட்டரைட் கல் போன்ற உள்ளூர் பொருள்களைப் பயன்படுத்தி, கலாபூமி நுழைவுப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

டெரிகோட்டா பாரம்பரிய ஓவியங்கள், கல் மற்றும் மரத்தில் செதுக்குதல், இயற்கைப் பொருள் உலோகக் கைவினைப் பொருள்கள் காட்சியகங்கள் போன்றவை ரசிக்க வைக்கும்.

பல்வேறு கைத்தறிகள், பழங்குடியினரின் கைவினைப் பொருள்கள், ஸ்ரீஜகந்நாதர் கலாசாரத்தின் கைவினைப் பொருள்கள் கொண்டது. இயற்கைப் பொருள் கைவினைக் காட்சியகம், கிராமப்புற ஒடிஸ்ஸாவைப் பிரதிபலிக்கிறது. பழங்குடியினரின் கிராமத்தைக் காணலாம். ஆன்மிக மையம் ஸ்ரீஜகந்நாதர் கலைக்கூடத்தில் உள்ளது.

சடங்கு ஆடைகள், பித்தளை மணி, உலோகப் பொருள்கள், புனித மண் பாண்டங்கள், பாட்ட சித்ரா ஓவியங்கள், மகாரி, கோடி புவா நடனக்கலைஞர்களின் உடைகள், கர்ப்பக்கிரக தெய்வங்களை சுற்றியுள்ளவை என எல்லாம் இங்குக் காட்சிக்கு உள்ளன.

குர்தா மாவட்டத்தின் பர்தா துணிகள் முதல் பிபிலியின் சிக்கலான கை வேலைகள், நேர்த்தியான கந்தர்வா, இகாட் ஜவுளிகள், பஸ்புரி, கோட்பெட் பழங்குடி நெசவுகள் என ஒவ்வொரு ஜவுளி பாரம்பரியமும் அருங்காட்சியகத்தில் இடம்பிடித்துள்ளன. ஒடிஸா நடனங்களைப்

பிரதிபலிக்கும் நடன வடிவங்களுக்காக தனிக் காட்சியகம் இங்கு தயாராகி வருகிறது.

கைவினைப் பொருள்கள், புடவைகளை விலை கொடுத்து வாங்கிச் செல்லலாம்.

-ராஜி ராதா, பெங்களூரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com