மடாலயங்களில் படப்பிடிப்பு

மடாலயங்களில் படப்பிடிப்பு

சபரி, ரோகித், ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, பி.எல்.தேனப்பன் எனப் பலர் நடித்துள்ள படம் '99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு'.
Published on

சபரி, ரோகித், ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, பி.எல்.தேனப்பன் எனப் பலர் நடித்துள்ள படம் '99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு'. மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி எழுதி, இயக்கி, இசை அமைத்து, தயாரித்துள்ளார்.

சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி படம் குறித்துப் பேசும் போது, 'சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இதன் கதை நடக்கிறது. நான் சினிமாவுக்குப் புதியவன். எனக்குத் தெரிந்ததை வைத்து, எளிமையாக இப்படத்தை எடுத்துள்ளேன்.

ஒரு விளம்பரப் படத்துக்காக உருவாக்கப்பட்ட கருவை நண்பர்கள் சிலர் துணையுடன் திரைக்கதையாக்கியுள்ளேன். அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடாலயங்களின் உள்ளே சென்று ஐந்நூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளோம்.

படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து இலங்கையில் படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கவுள்ளன. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.

இவ்விழாவில் இதே நிறுவனம் தயாரிக்கும் 'ஹஸ்கி ஹவுஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரும் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com