நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

உலகம் பலவிதம் - 08-11-2026

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், தனது பாட்டி பார்ப்பதற்காக சீனப் பெருஞ்சுவரைப் போன்ற பிரமாண்ட சுவரோவியத்தை சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளார்.

Updated On :

பாட்டிக்காக பெருஞ்சுவர் அமைத்த சீன இளைஞன்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், தனது பாட்டி பார்ப்பதற்காக சீனப் பெருஞ்சுவரைப் போன்ற பிரமாண்ட சுவரோவியத்தை சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளார்.

சீனப் பெருஞ்சுவரைக் காண விரும்பிய 80 வயதுப் பாட்டியின் ஆசையைக் கைவண்ணத்தின் மூலம் நிறைவேற்றியுள்ள பேரனின் நெகிழ வைக்கும் அன்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இளைஞர் வடிவமைத்துள்ள சீனப் பெருஞ்சுவரில் கற்களால் ஆன நடை பாதைகள், உயரமான மதில் சுவர்கள், அதைச்சுற்றியுள்ள மலைப்பகுதிகள் அனைத்தும் துல்லியமாக அமைந்துள்ளது சிறப்பு. கலைப்படைப்பு அருகே பேரனுடன் பாட்டி பெருமிதம் பொங்க நின்றபடி கையசைக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

Story image

மூதாதையர் நினைவாக

வானில் ராட்சத பட்டங்கள் மத்திய அமெரிக்க நாடான குவாதமாலாவின் சம்பாங்கோ நகரில் இறந்த மூதாதையரை நினைவு கூரும் தினத்தை முன்னிட்டு 48-ஆவது ராட்சத பட்டங்கள் விடும் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

மாயன் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பல வண்ணங்களில் பாரம்பரிய வடிவமைப்புகளுடன் பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Story image

மசாஜ் கருவியைப் பயன்படுத்தும் பூனை

வெள்ளை நிறப்பூனை ஒன்று தானியங்கி மசாஜர் கருவியை முன்கால்களால் சரிசெய்து, தலையில் தானே மசாஜ் செய்து கொள்கிறது. பின்னர் கண்களை மூடிக்கொண்டு சொகுசாக ஓய்வெடுக்கிறது.

சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த விடியோ வைரலாகி வருகிறது. 'பூனைகள் கூட மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன' என்று எக்ஸ் தளங்களைப் பயன்படுத்துவோர் பதிவிட்டு வருகின்றனர்.

Story image

சிறுத்தையை விரட்டிய வளர்ப்பு நாய்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் பண்ணை வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை அங்கிருந்த வளர்ப்பு லாப்ரடார் நாய் விடாமல் குரைத்து விரட்டியடித்தது.

நாயின் தொடர் குரைப்பு சப்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட உரிமையாளர் குர்மீத் சிங், நாயால் விரட்டப்பட்ட சிறுத்தை பின்வாங்கி ஓடுவதைக் கண்டு வியப்பிலாழ்ந்தார். சமூக வலைதளங்களில் இக்காட்சி வைரலாகி வருகிறது.

Story image

மனிதர்களை விஞ்சும் மலையேறும் ரோபோ

சீனாவின் தையான் நகரில் ரோபோக்களுக்கான மலையேறும் போட்டி நடைபெற்றது.

இது 3100-க்கும் மேற்பட்ட செங்குத்தான படிக்கட்டுகளுடன் 3.9 கி.மீ. தொலைவு கொண்டது. போட்டியில் பங்கேற்ற ஒரு ரோபோ 43 நிமிடங்கள், 41 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டு மலையேறி சாதனை படைத்தது. மனிதர்கள் இதே தூரத்தைக் கடக்க ஒன்றரை முதல் 2 மணி நேரமாகும்.

Story image

ஜிம்னாஸ்டிக் ஒராங்குட்டன்

சீனாவின் வெய்ஹாய் நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஒரு ஒராங்குட்டன் (வாலில்லாத அரியவகை மனிதக் குரங்கு) ஜிம்னாஸ்டிக் (தசைப் பயிற்சி) வீரரைப் போன்று சாகசம் செய்து அசத்துகிறது.

ஒராங்குட்டன் அங்குள்ள கிடைமட்ட கம்பத்தை கைகளாலும் கால்களாலும் மாறிமாறிப் பிடித்துக் கொண்டு செய்யும் சாகசங்களை ஏராளமான பார்வையாளர்கள் வியந்து ரசிக்கின்றனர். ஒராங்குட்டனின் இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.