மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

மார்வெல் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்

உலக அளவில் மார்வெல் திரைப்படங்களுக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

Updated On :

உலக அளவில் மார்வெல் திரைப்படங்களுக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதற்குத் தீனி போடும் வகையில், 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் இறுதி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மார்வெல் உலகின் மிக வலிமையான வில்லனாகக் கருதப்படும் டாக்டர் டூமை எதிர்கொள்ள அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் ஒன்றிணைவதாக டிரைலர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

டிசம்பர் 17 -இல் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தை ஆண்டனி, ஜோ ரூúஸா ஆகியோர் இயக்கியுள்ளனர். ஸ்டீபன் மெக்ஃபீலி, மைக்கேல் வால்ட்ரான் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி'எஸ்போசிட்டோ, ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், அந்தோணி மேக்கி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ் பாக்ராக், வியாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், ஜோசப் க்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் இயன் மெக்கெல்லன் மற்றும் பேட்ரிக் ஸ்டீவர்ட்டும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.