திரைக் கதிர்
உலகப் புகழ்பெற்ற எம்மி விருதுகள் நிகழ்வில், விருது கொடுத்த முதல் இந்திய நடிகர் என்கிற கெளரவத்தைப் பெற்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி
உலகப் புகழ்பெற்ற எம்மி விருதுகள் நிகழ்வில், விருது கொடுத்த முதல் இந்திய நடிகர் என்கிற கெளரவத்தைப் பெற்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான சிறந்த விருதான சர்வதேச எம்மி விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான 54ஆவது சர்வதேச எம்மி விருதுகள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எம்மி விருதுகள் வரலாற்றில் முதல் இந்திய நடிகராக விஜய் சேதுபதி கலந்துகொண்டு விருது வழங்கியுள்ளது திரைவட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்.
இயக்குநர் ஷாகி கபிர் எழுத்தில் இயக்குநர் ஜிது அஷ்ரஃப் இயக்கத்தில் நடிகர்கள் குஞ்சக்கோ போபன், பிரியா மணி, ஜெகதீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் ஆபிஸர் ஆன் டூட்டி.
கொலை வழக்கை மையமிட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணுக்குச் சொந்தமான நபர் தனது எண்ணுக்கு ஏகப்பட்ட அழைப்புகள் தொடர்ந்து வந்து தொல்லைக் கொடுப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் இவ்விவகாரத்தில் படத்தின் தயாரிப்பாளர் மார்ட்டின் பரகாட் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு படக்குழுவினருக்கு புதிய சிக்கலை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

