கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

சின்னதிரை

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா.

Updated On :

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா. சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சாமந்தி' சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் நம்மிடம், 'நான் தற்காலிகமாக மீடியாவை விட்டு விலகி இருந்தது எந்த ஒரு தனிப்பட்ட காரணத்தினாலும் அல்ல. அது பல நிகழ்வுகளின் தொகுப்புதான். ஆனால், ஒன்றை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், 'நான் என்றைக்குமே சீரியலுக்கு எதிரானவன் அல்ல'. ஒரு சின்ன மாற்றத்துக்காகவே சில காலம் விலகி இருக்க முடிவு செய்தேன். கரோனா லாக்டவுன் சமயத்தில்தான் மீண்டும் நடிக்க வரலாம் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

வழக்கமாக 'ஒருமுறை மீடியாவுக்குள் வந்துவிட்டால், நாம் எப்போதும் அங்கேயே இருக்கத்தான் தோன்றும்' என்பார்கள். நானும் என்றைக்குமே கேமராவைவிட்டு ஒதுங்கியதில்லை. இந்த இடைவேளைக் காலம் என்னுடைய நடிப்புத் திறனை மெருகேற்ற எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.

இன்றைய அடுத்த தலைமுறைப் பிள்ளைகளும் 'மெட்டி ஒலி' சீரியலையும், அதன் பாடலையும் ரசிப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த பெருமிதமாக இருக்கிறது. சொல்லப்போனால், அதுவே நான் மீண்டும் திரைக்கு வருவதற்கான முக்கிய உந்துதலாகவும் இருந்தது.

இப்போது அந்த சீரியலுக்கு ரிப்பீட் வேல்யூ இருக்கிறது. 'மெட்டி ஒலி 2' பற்றிய பேச்சுகள் நடந்தபோது நான் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்போதும் அதுபற்றிய பேச்சுகள் இருக்கின்றன. கூடிய விரைவில் அது நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

பத்து வருடங்களுக்கு முன்பு 'பொன்னூஞ்சல்' சீரியலில் இருந்துதான் நான் பிரேக் எடுத்தேன். அந்த சீரியலில் என்னுடன் ஷமிதா நடித்திருந்தார். தற்போது நான் கம்பேக் கொடுத்திருக்கும் இந்த சீரியலிலும் ஷமிதாதான் என்னுடன் நடிக்கிறார்'' என்றார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் இருந்து விலகியிருந்த சஞ்ஜீவ், மீண்டும் அந்தத் தொடரில் இணைந்துள்ளார். இதில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் தொடர், திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். கயல் தொடர் 1500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் கயல் தொடரின் இறுதிக்கட்டக் காட்சியில் சஞ்ஜீவ் நடித்துள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.