

கவிதையில் மோனை அழகு (முதலெழுத்து ஒன்றி வருதல்) முக்கியமானது. வகரத்துக்கு மகரம் இன மோனையாகும். கவிஞன் பாடல் எழுதிவரும் நிலையில் எதுகை, மோனை என்பன இயல்பாகவே வந்து தோன்றும். அவை பொருள் பொருத்தப் பாட்டுடன் அமையும். இப்படி எழுவதே நல்ல கவிதையின் அடிப்படை. ஆதலின், தனிச்சொல் "அடி' எனப் போட்டு "மேலைக்கடல் முழுதுங் கப்பல் விடுவோம்' என்று பாடியுள்ளார் பாரதியார்.
நாம் வேண்டுமானால் உரையாசிரியர்கள் விளக்கவுரை வரைவதுபோல் காரணம் கற்பிக்கலாம். அப்படி சில செய்திகள்: "அடி' என்ற தனிச்சொல், அடிப்புறம் உள்ள இந்தியப் பெருங்கடலைக் குறிக்கிறது. மேற்கில் அமைந்த அரபிக்கடல் வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தால் (மும்பையிலிருந்து), உலகம் முழுதும் சுற்றிவரலாம். தமிழகத்தோடு வணிகத் தொடர்புடைய அரேபியா, நாகரிகத் தொட்டில் எகிப்து, நமையாண்ட வெள்ளையர் பூமி இங்கிலாந்து, கலை-கலாசார சிறப்புமிக்க பிரான்ஸ் தேசம், ரஷியா என்று போய்க்கொண்டே இருக்கலாம். பாரதியின் நோக்கம், இந்தியா உலக நாடுகளோடு வணிகம்-கடல்வழி வணிகம் மிகுதியாகச் செய்ய வேண்டும் என்பதே. முக்கியமாகக் "கப்பல் விடுதல்' நமக்கு வ.உ.சி.,யை நினைவுபடுத்தும்.
கிழக்குப் பக்கம் வங்காள விரிகுடா வழியாகச் சென்றால் (கொல்கத்தாவிலிருந்து) மியான்மர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லலாம். கிழக்குக் கடலில் புறப்பட்டு "உலக வலம்' வருதல் கடினம். மேலைக்கடலில் புறப்பட்டால், சுற்றிச் சுற்றி ஞாலம் முழுதும் போய்க்கொண்டே இருக்கலாம். "முழுதும்' என்ற சொல், உலகம் முழுதும் என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கிறது.
இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!
தமிழில் ஆயுத எழுத்தாக "ஃ' உள்ளது. அது எப்பொழுது தோன்றியது? அதற்கு ஏன் ஆயுத (பர்ர்ப்) எழுத்து என்று பெயர் வந்தது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.