ஊடகத் தமிழின் உண்மையான பங்களிப்பே தமிழை வளர்க்கும்: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

கோவை, ஜூன் 25: ஊடகத் தமிழின் உண்மையான பங்களிப்பே தமிழை வளர்க்கும் என்று "தினமணி' ஆசியர் கே.வைத்தியநாதன் கூறினார். கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஊடகத் தமிழ் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்குக்
ஊடகத் தமிழின் உண்மையான பங்களிப்பே தமிழை வளர்க்கும்: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்
Published on
Updated on
2 min read

கோவை, ஜூன் 25: ஊடகத் தமிழின் உண்மையான பங்களிப்பே தமிழை வளர்க்கும் என்று "தினமணி' ஆசியர் கே.வைத்தியநாதன் கூறினார்.

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஊடகத் தமிழ் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்குக்குத் தலைமை வகித்து அவர் பேசியது:

ஊடகத் தமிழ் என்பது தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வந்துள்ளது. இலக்கியத்தின் ஒரு பிவான உரைநடை இலக்கியம் கிறிஸ்தவப் பாதியார்கள், ஐரோப்பியர்கள் தமிழகத்தில் கால் பதித்த பிறகு உருவானது. பிறகு இது கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தமிழ் வளர்ச்சியில் பெய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழுக்கு புதிய வார்த்தைகளை, புதிய பணாமத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.

கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை அதாவது 1980 வரை கூட ஊடகத் தமிழானது, தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெய பங்காற்றியுள்ளது. கவிதைகள், நாவல், சிறுகதை, நூல் ஆய்வு, இலக்கியத் திறனாய்வுகள் கூட ஊடகங்களில் இடம் பெற்று வந்தன. ஆனால் கடந்த கால் நூற்றாண்டுகளாக ஊடகம் என்பது வியாபாரத்துக்கு மட்டுமே என்பது போன்ற தோற்றம் உருவாகியிருப்பதை, அந்த உண்மையை ஊடகத்தின் ஒரு அங்கமாக உள்ள நானும் உணர்கிறேன்.

இந்தச் சூழலில் ஊடகத் தமிழானது, தமிழ் இலக்கியத்துக்கு உண்மையான பங்களிப்பை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் தமிழ் வாழும் என்று உறுதியாக நம்புகிறேன். மலேசிய காட்சி ஊடகங்களில் தமிழுடன் மலாய் மொழி கலப்பு இருப்பதாகக் கட்டுரையாளர் கல்பனா செல்வராஜ் கூறினார். மலேசியாவில் அப்படி என்றால் தமிழகத் தொலைக்காட்சிகளிலோ தமிழுடன் ஆங்கிலக் கலப்பு அதிகம் உள்ளது. இதை எண்ணி நாங்கள் வருத்தப்படுகிறோம்.

அண்மையில் முனைவர் ஒளவை நடராஜனுடன் பேசும்போது, தமிழ் ஊடகங்களில் ஆங்கிலக் கலப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றார். அன்னியர்களால் ஆளப்படாத சீனர், ரஷியர், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் பிற மொழிக் கலப்பு அதிகம் இல்லை. நாம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு வந்தவர்கள் என்பதால் நமது மொழியில் அவர்களது தாக்கம் இருக்கத்தான் செய்யும் அதை எப்படித் தவிர்ப்பது என்றார்.

இதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதே நேரம் 1930 முதல் 1960 கள் வரை தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிக்க தினசகள், வார இதழ்கள் எத்தனை எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டன. புதுமைப்பித்தன், கல்கி, ஜெயகாந்தன் பற்றி இன்று நாம் பேசுகிறோம் என்றால் அந்தக் காலத்து ஊடகங்கள் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பதற்காக அவர்களுக்குஅதிகம் வாய்ப்பு அளித்தன. ஆனால் இன்று ஊடகங்களில் இலக்கியப் பங்கு குறைந்துவிட்டதுடன் மொழிச் சிதைவுக்கு மிக அதிகமான பங்களித்துள்ளன.

எனவே ஊடகங்கள் தவறைத் திருத்தி இனியாவது தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து நல்லவற்றை வழங்க வேண்டும். இந்தச் செம்மொழி மாநாட்டை இதற்கான வேண்டுகோள் விடுப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ள இது போன்ற அற்புதமான மாநாடுகள் நாளைய தலைமுறைக்குப் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே இது நடைபெறுவதற்கான இலக்கை எட்டியதாகக் கருத முடியும்.

கட்டுரையாளர் குமரன், தமிழகத்தில் தமிழ் சிறப்பாக இருந்தால்தான் மலேசியாவிலும் நன்றாக இருக்கும், ஏனெனில் நாங்கள் தாய்த் தமிழ்நாட்டையே சார்ந்துள்ளோம் என்றார்.

வேறு இடங்களில் வசிப்பவர்கள் தமிழில் தவறு செய்தால் அது யாரையும் பாதிக்காது. ஆனால் தமிழகத்தில் தமிழ் இலக்கியத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அது ஒட்டுமொத்த தமிழினத்தையே பாதிக்கும்.

தமிழகத்தில் சிறுகதை இலக்கியத்தை மறந்து விட்ட நிலையில் மலேசியப்பல்கலைக்கழகத் தமிழ்த் துறை அண்மையில் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு பிரமிக்கவைக்கிறது.

இது போன்ற முயற்சிகள் மூலம் தமிழ் பயன் பெறுமானால் அது தமிழினம் வளர எழுப்பியுள்ள குரலுக்கு அர்த்தமாகும் என்றார் வைத்தியநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com