நா ரண துரைக் கண் ணன் - ஜீவா இலக் கிய உல கில் மறக்க முடி யாத பெயர்.
சி று க தை கள், நாவல் கள், தலை வர் கள் வர லாறு, நாட கம், கவிதை, அர சி யல் தலை யங் கம் என்று பல் வேறு இலக் கி யத் துறை க ளில் தனக் கென்று தனி வழி வகுத் துக் கொண் ட வர்.
இத ழா சி ரி ய ராக இருந் த தால் பல் வேறு பகு தி களை எழு தும் போது வெவ் வேறு புனைப் பெயர் களை அமைத் துக் கொள்ள நேர்ந் தது. தான் ஆசி ரி ய ராக இருந்த ஆனந்த போதினி, பிரசண்ட விக டன் மாத, மாத மி ரு முறை இதழ் க ளில், மைவண் ணன், வேள், துலாம், தராசு, திரு ம யி லைக் கவி ரா யர், துரை, லியோ எனப் பல் வேறு புனைப் பெயர் க ளில் கதை, தொடர் கதை, அர சி யல் தலை யங் கம், விமர் ச னங் கள், விவா தங் கள், நாட கங் கள் எழு திக் குவித் தார். அவ் வாறு எழு தும் போது பல் வேறு பெயர் க ளைச் சூட் டிக் கொண் டா லும் "ஜீவா' என்ற பெயர் தான் வாச கர் கள், எழுத் தா ளர் க ளி டையே அன்று பிர ப ல மா னது.
பிற் கா லத் தில் பொது வு டை மைக் கட் சித் தலை வர் ப.ஜீவா னந் தம் "ஜீவா' என்று அழைக் கப் ப டத் தொடங் கி ய தும் நாரண துரைக் கண் ண னாரை "ஜீவா' என்று அழைப் பது குறைந் தது. இதில் நாரண துரைக் கண் ண னுக்கு வருத் தமே.
சென்னை, திரு ம யி லை யில், 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, க.வே.நாரா ய ண சாமி- அலர் மேல் மங்கை தம் ப திக்கு மக னா கப் பிறந் தார். பெற் றோர் சூட் டிய பெயர் நட ரா சன். ஆனால், அவர் கள் "துரைக் கண்ணு' என்று செல் ல மாக அழைத் த னர். துரைக் கண் ணன் என்ற பெய ரு டன் தந்தை பெய ரில் உள்ள "நாரண'னைச் சேர்த் துக் கொண்டு நாரண துரைக் கண் ண னா னார். எழுத் து ல கில் அந் தப் பெயர் நிலை பெற் றது.
ம றை ம லை ய டி கள் போன்ற மேதை க ளி டம் தமிழ் பயின் றார். மெய்ப்பு சரி பார்க் கும் பணி யில் பல அச் ச கங் க ளில் பணி யாற் றி னார். மெய்ப்பு சரி பார்ப் ப தில் வல் ல வ ரா னார்.
வ ரு வா யைப் பெருக்க சில காலம் அடி சன் கம் பெ னி யில் பணி யாற் றி னார். நாரண துரைக் கண் ண னின் முதல் கட் டு ரையே "சரஸ் வதி பூஜை' என் கிற பெய ரில் 1924-ஆம் ஆண்டு சுதே ச மித் தி ரன் இத ழில் பிர சு ர மா னது.
த மிழ்ப் புல மை யு டன் எழுத் தில் ஆர் வ மும் பிறந் தது. கதை மாந் தர் (பாத் தி ரங் கள்) வாயி லாக சமூக சீர் கே டு களை விளக்கி, அவற் றைக் களை யும் ஆர் வம் இயற் கை யி லேயே ஏற் பட் டது. துணி வா க வும், கற் ப னை யா க வும் உண்மை என நம் பக் கூடிய வகை யில் எழு தும் கலை கைவ ரப் பெற் றார். கற் ப னையை உண்மை என நம் பும் படி எழு தும் திற மை யால் அவ ருக் குத் தொடக் கத் தி லேயே சங் க டம் ஏற் பட் டது.
"நான் ஏன் பெண் ணா கப் பிறந் தேன்? ' என்ற புதி னம் தொட ராக வந்து நூல் வடி வம் பெற் றது. தம் குடும் பத் தின் நிஜ வாழ்க் கையை அம் ப லப் ப டுத்தி விட் டார் என்று சிலர் குற் றம் சாட் டி னர். அவ ருக்கு மணம் பேசி முடிக் கப் பட்ட பெண் வீட் டா ரும் அவர் க ளுள் ஒரு வர். தம் குடும் பத்து உண் மைச் சம் ப வ மாக அந் தக் கதை இருப் ப தா கப் பெண் கொடுக்க வந் த வர் கள் முடிவு செய் த னர். இத் த கைய குண மு டைய மாப் பிள் ளைக் குத் தன் மகளை மணம் முடித் தால் பெண் ணின் பிற் கால வாழ்க்கை என்ன ஆகுமோ என்று அவர் கள் அஞ்சி, பெண் கொடுக்க மறுத்து விட் ட னர். திரு ம ணம் நின் று போ னது.
கற் ப னைக்கு ஏற் பட்ட விளை வால் ஜீவா வியப் ப டைந் தாரே தவிர, கவலை அடை ய வில்லை. அவர் எழுத்து மேலும் வீறு கொண் டது. எழுத் தில் அவ ருக்கு நம் பிக்கை ஏற் பட் டது. சமூக அவ லங் க ளைத் தம் கதைச் சம் ப வ மாக் கிச் சாடி னார்.
அந் தத் திரு ம ணத் தடைக் குப் பிறகு வேறு இடத் தில் 1932-ஆம் ஆண்டு, தன் 25வது வய தில் மீனாம் பாள் என்ற பெண் ணைத் திரு ம ணம் செய் து கொண் டார். 1982-ஆம் ஆண்டு வரை ஜீவா வுக்கு உறு து ணை யாக இருந் தார். அவர் மறை வுக் குப் பிறகு ஜீவா மிக வும் சோர் வ டைந் தார்.
எ ழுத்தை முழு மூச் சா கக் கொண்ட எழுத் தா ளர் க ளுள் நாரண துரைக் கண் ண னுக் குச் சிறப் பி டம் தர லாம். அவ ரு டைய சம காலத் த வ ரான "கல்கி'யைப் போன்று புகழ் பெற் றார். மகாத்மா காந் தி யின் கொள் கை க ளில் மிக வும் பற் றுக் கொண் ட வர் என் றா லும் பெரி யார், அண் ணா வின் சமூ கச் சீர் தி ருத் தக் கொள் கை க ளி லும் அவ ருக்கு ஈடு பாடு உண்டு. ஜீவா வின் ஆன் மிக எழுத் துக் காக மகா பெரி ய வர் சங் க ராச் சா ரி யா ரால் பாராட் டப் பட் டார்.
வள் ள லார் மற் றும் மகா கவி பார தி யின் நூல் களை ஆர் வத் து டன் கற் றார். திரு வ ருட்பா பற் றிய நூலொன்றை எழு தி னார். பிற் கா லத் தில் பார தி யின் பாடல் க ளுக்கு விடு தலை பெற் றுத் தரு வ தற் குப் பெரும் கிளர்ச்சி செய்து அதற் கென ஏற் பட்ட குழு வி னர் சார் பில் பார தி யின் துணை வி யார் செல் லம் மாளை திரு நெல் வே லிக் குச் சென்று, கண்டு, அனு ம திக் கடி தம் வாங் கி னார்.
"கல்கி'யை வாச னுக்கு அறி மு கப் ப டுத் திய பரலி சு.நெல் லை யப் பர், நாரண துரைக் கண் ணனை "லோகோ ப காரி' வார இத ழில் துணை யா சி ரி ய ராக் கி னார். தேச பந்து, திரா வி டன் இதழ் க ளில் பணி யாற் றிய பிறகு 1932-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' இத ழின் ஆசி ரி யர் குழு வில் சேர்ந் தார். "ஆனந்த போதினி' இதழ் அந் தக் கால கட் டத் தில் பிர ப ல மாக விளங் கி யது. அந்த இத ழில் தான் "அழ காம் பிகை' என்ற சிறு க தையை எழு தி னார். அதுவே அவ ரு டைய முதல் சிறு கதை என்று கூற லாம்.
பெ ரும் பர ப ரப்பை ஏற் ப டுத் திய நாரண துரைக் கண் ண னின், "நான் ஏன் பெண் ணா கப் பிறந் தேன்? ' என்ற நாவ லைப் படித்து வ.ரா. பெரி தும் பாராட் டி னார். 1942-இல் "உயி ரோ வி யம்' என்ற புதி னம் எழு தி ய போது வ.ரா. அந்த நாவ லுக்கு முன் னுரை வழங் கி னார்.
தே வ தா சி கள் என்ற இழுக்கை சமூ கத் தில் இருந்து களைய வேண் டும் என்ற கிளர்ச்சி நாட் டில் பர விய காலத் தில் எழு தப் பட்ட நாவல் தான் "தாசி ர மணி'.
பொ து வாழ் வில் மிக வும் ஈடு பட் ட வர். பலன் கரு தாது உழைத் த வர். சென்னை எழுத் தா ளர் கள் சங் கம் ஏற் ப டப் பெரி தும் கார ண மா ன வர். அந்த அமைப் புக் குத் தான் தலைமை ஏற் கா மல் கல்கி ரா.கிருஷ் ண மூர்த் தியை வற் பு றுத் தித் தலை வ ராக் கி னார்.
மக் கள் நாள் தோ றும் பயன் ப டுத் தும் வகை யில் தோத் தி ரப் பாடல் களை "அருட் கவி அமு தம்' என்ற பக் திப் பாடல் கள் தொகுப் பாக வெளி யிட் டி ருக் கி றார்.
""தமிழ் இலக் கிய உல குக்கு ஓர் அரு மை யான எழுத் தா ளர் ஜீவா! '' என்று கவி ஞர் கண் ண தா சன் ஒரு முறை பாராட் டி யுள் ளார்.
தன் னைப் புகழ் வ தை யும், காரி யம் சாதிக் கப் பாராட் டு வ தை யும் ராஜாஜி ஏற் க மாட் டார் என் பதை அவ ரு டன் பழ கி ய வர் கள் அறி வார் கள். மது வி லக் குக் கொள்கை, தீண் டாமை ஒழிப் புக் கொள்கை, சீர் தி ருத் தக் கருத் து கள் இவற் றால் ஈர்க் கப் பட்ட ஜீவா, ராஜா ஜி யைப் பற் றிய வாழ்க் கைச் சித் தி ரம் ஒன்றை எழு தி னார். அதை ராஜா ஜி யி டம் வெளி யிட அனு மதி கேட் ட போது வெளி யி டக் கூ டாது என்று ராஜாஜி கண் டிப் பா கக் கட் ட ளை யிட் டார். ஆனால், நாரண துரைக் கண் ண னி டம் மதிப்பு வைத் தி ருந்த ராஜாஜி, நூலைப் படித் துப் பார்த்து ""நானே இதை வி டச் சிறப் பாக எழுதி இருக்க முடி யாது'' என்று பாராட்டி ஆசி வழங் கி னார். ராஜா ஜி யி டம் பாராட் டுப் பெறு வது அவ் வ ளவு எளி தன்று.
1949-இல் மகா கவி பார தி யார் இலக் கி யங் களை நாட் டு டை மை யாக் கப் போராட ஏற் பட்ட குழு வில் முக் கிய பங் கு வ கித்து வெற்றி பெற் றார்.
ப தி னைந் துக் கும் மேற் பட்ட புதி னங் க ளும், சிறு க தைத் தொகு தி க ளும், கவி தைத் தொகு தி க ளும், நாட கங் க ளும் எழுதி தமிழ் நாட்டு மக் க ளி டை யில் படிக் கும் வழக் கத் தை யும், சீர் தி ருத் தக் கருத் து க ளை யும் பரப் பிய நாரண துரைக் கண் ண னார், 32 ஆண் டு க ளுக்கு மேல் தொடர்ந்து பிர சண்ட விக டன் ஆசி ரி ய ரா கத் திகழ்ந் தார்.
20-ஆம் நூற் றாண் டின் புரட்சி எழுத் தா ள ரான நாரண துரைக் கண் ணன், இறு திக் காலத் தில் வள மாக வாழ வில்லை. பல அறி ஞர் க ளும், மக் க ளும் வற் பு றுத் திய பிறகே அவ ரது நூல் கள் அர சு டைமை ஆக் கப் பட் டன.
எ ழுத் தா ளர் ஜீவா- நாரண துரைக் கண் ண னுக்கு தமிழ் நாட் டில் தகுந்த புக ழும் மரி யா தை யும் அளிக் கப் ப ட வில்லை. அவர் வாழ்ந் து வந்த "சூளை மேடு' பகு தி யில் உள்ள முக் கி ய மான சாலைக்கு நாரண துரைக் கண் ணன் சாலை என்று பெய ரிட் டுப் பெரு மைப் ப டுத் த லாம். இப் போ தும் காலம் கடந் து வி ட வில்லை.
1996-ஆம் ஆண்டு, ஜூலை 22-ஆம் தேதி அவர் மறை யும் வரை எழு திக் கொண்டே இருந் தார். நாரண துரைக் கண் ண னின் மிக எளி மை யும், தொண் ணூறு வயது நிறைந் த போ தும் நினை வாற் ற லு டன் ஆற் றிய பணி யும் தமிழ் நாடு உள் ள வரை மறை யாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

விழுப்புரம் மண்டலத்தில் தோழா்களின் குரல் மீண்டும் ஒலிக்குமா?

வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீா் தீ விபத்து: 10 வாகனங்கள் கருகி நாசம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


