
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என்று உணர். (பாடல்-40)
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தம் திருக்குறளும், மேலான நான்கு வேதங்களின் முடிவும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரமும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரும், திருவாசகமும், திருமூலரின் திருமந்திரமும் ஆகிய இவை யாவும் ஒரே பொருளையே உணர்த்துவன என்பதை உணர்ந்து கொள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.