மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: வடவேங்கடம் - திருமலை; தென்குமரி - குமரிமுனை!

'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதிதானா
Updated on
1 min read

 ""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதிதானா? தென்குமரி என்பது இன்றைய குமரிமுனையா அல்லது கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டமா?

 பனம்பாரனார் கூறிய வடவேங்கடம் என்பது திருமலையையும், தென்குமரி என்பது தற்போதைய குமரியையும் குறிக்கும். ராமன் இலங்கைக்குப் பாலம் அமைத்துச் சென்றான் என இராமாயாணம் கூறுகிறது. ராமன் வாழ்ந்த காலம் சுமார் 2.16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திரேதாயுகம். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா வெளியிட்ட புகைப்படத்தில் இந்தியா-இலங்கை இடையே கடலுள் பாலம் போன்ற மணல் திட்டுகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் 2.16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் தென்பகுதியான தற்போதைய குமரிக்குத் தெற்கு கடல் சூழ்ந்ததாகவும் இலங்கை ஒரு தீவாகவும் இருந்தது உறுதி.

 தொல்காப்பியர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு எனக்கொண்டால், அதற்கு முன்பே தற்போதைய குமரிக்குத் தெற்கே கடல் பரப்புதான் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, பாயிரத்தில் குறிப்பிட்டுள்ள தென்குமரி என்பது தற்போதைய குமரி என்பது தெளிவாகிறது.

 இன்றைய பூகோள அறிவியலின்படி இமயமலை சுமார் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எனவும், அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவின் தென்பகுதியான குமரிக்குத் தெற்கிலும் நிலப்பரப்பு இருந்தது எனவும், அவை கடலில் அமிழ்ந்து அதன் எதிர் பகுதியான வடக்கில் இமயமலை உருவானது (பட்ங்ர்ழ்ஹ் ர்ச் ல்ப்ஹற்ங் ற்ங்ஸ்ரீற்ர்ய்ண்ஸ்ரீள்) என்றும் கூறுகின்றனர்.

 இக்கருத்துப்படி இமயமலை உருவான காலத்தில் தென் பகுதியான குமரிக்கண்டம் எனக் கூறப்படும் பகுதியும் கடலில் அமிழ்ந்திருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டால், தொல்காப்பியர் காலத்தில் குமரிமலை, குமரிஆறு இல்லை என்பதை அறியலாம்.

 வரலாற்றின்படி, தொல்காப்பியர் காலம் எனக் கருதப்படும் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்குச் சிலகாலம் முன்னர் இந்தியாவின் வடபகுதி மெüரிய ஆட்சியாகவும், தென்பகுதி ஏறத்தாழ கிருஷ்ணா நதிவரை தமிழ் மன்னர்களின் ஆட்சியாகவும் இருந்தது. வட இந்தியாவில் அசோகர் ஆட்சியில் (கி.மு.273-236) புத்தமதம் தழைத்தும் பாலி மொழி பயன்பாட்டிலும் இருந்தது. இவ்வரலாற்றின்படி தற்போதைய திருமலை எனப்படும் வேங்கடமலைக்கு வடக்கே பாலி மொழி வழக்கத்தில் இருந்தது எனவும் அறிய முடிகிறது. இதனால் பாயிரத்தில் கூறிய வடவேங்கடம் என்பது தற்போதைய திருப்பதி என்பது தெளிவாகிறது.

 இதிகாசம், பூகோள அறிவியல், வரலாறு இவற்றின் மூலம் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார், வடவேங்கடம் என்று திருமலையையும் தென்குமரி என்று தற்போதைய குமரியையும் குறிப்பிட்டுள்ளார் என்பதே சரியானது.

  இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

 "முகம்' என்ற சொல் தமிழ்ச் சொல்லா? அல்லது வடசொல்லா?

 -புலவர் கி.கிருஷ்ணசாமி, கோயில்பட்டி.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com