(ர, ற பொருள் வேறுபாடு)
கரவு - பொய், வஞ்சனை, மறைவு
கறவு - கப்பம்
கரவை - கம்மாளர் கருவி
கறவை - பாற்பசு
கரி - அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை
கறி - இறைச்சி, மிளகு
கரத்தல் - மறைத்தல்
கறத்தல் - கவர்தல், பால் கறத்தல்
கருத்து - எண்ணம்
கறுத்து - கருநிறங்கொண்டு
கரு - சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை
கறு - சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம்
கருப்பு - பஞ்சம்
கறுப்பு - கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை
கரை - எல்லை, தடுப்பு, ஓரம்
கறை - அழுக்கு, குற்றம், ரத்தம்
கரையான் - மீனவன்
கறையான் - செல் (ஓர் உயிரி)
கர்ப்பம் - கருவுறுதல், உள், சினை
கற்பம் - கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து
கர்ப்பூரம் - சூடம், பொன், மருந்து, கூடம்
கற்பூரம் - பொன்னாங்கண்ணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.