நூல் அகராதி அறிவோம்...

Published on
Updated on
1 min read

கலித்தொகை

"கற்றார் ஏத்தும் கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் இது, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 150 கலிப்பாவால் இயற்றப்பட்டது. அகப்பொருள் சுவைமிக்க ஐந்திணைகளைப் பற்றிய செய்திகளை அறிவிப்பது. பாலைக்கலியை பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியைக் கபிலரும், மருதக்கலியை மருதன் இளநாகனாரும், முல்லைக்கலியை சோழன் நல்லுருத்திரனும், நெய்தற்கலியை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர். இந் நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் நல்லந்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். நூலின் காலம் கடைச்சங்க காலம்.

கல்லாடம்

இந்நூலை இயற்றியவர் கல்லாடர். "கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே', "கல்லாடம் படித்தவரோடு மல்லாடாதே' போன்ற பழமொழிகளாôல் இதன் அருமை பெருமைகளை அறியலாம். இதில் 100 அகவற்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும் கேட்டபோது மதுரை சொக்கநாதப் பெருமானார் தலையசைத்து அசைத்து இன்புற்றார் என்று கூறப்படுகிறது.

மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் பாடல்களில் 100 பாடல்களைத் தேர்ந்து எடுத்துக்கொண்டு, அப்பாடல்களுக்குரிய விளக்கம் போல் இந்நூலைக் கல்லாடர் இயற்றியுள்ளார். இதற்கு மயிலேறும் பெருமாள்பிள்ளை 30 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். மிகுதியான 63 பாடல்களுக்குப் புதுவை சுப்பராய முதலியார் உரை எழுதியுள்ளார். இந் நூலாசிரியர் சங்ககாலப் புலவரா, அன்றி வேறானவரா என்பது ஆராய்ச்சிக்குரியதாகவே இருக்கிறது. ஆகவே, காலத்தை வகுக்க முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com