(ர, ற பொருள் வேறுபாடு)
காரி - கரிக்குருவி. காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன்
காறி - காறிஉமிழும் கழிவு
காரு - வண்ணான், தேவதச்சன்
காறு - காறுதல் (காறி உமிழ்), அளவு
காரை - ஒரு வகை செடி, ஒரு வகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை
காறை - ஒரு கழுத்தணி
கீரி - ஓர் உயிரினம்
கீறி - பிளந்து, அரிந்து
குரங்கு - ஒரு விலங்கு
குறங்கு - தொடை, கொக்கி
குரவர் - கடவுள், குரு, பெரியோர், அரசர்
குறவர் - ஒரு ஜாதியினர்
குரவை - கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி
குறவை - ஒருவகை மீன்
குரத்தி - தலைவி, குருவின் மனைவி
குறத்தி - குறத்தி ஜாதிப் பெண்
குருகு - பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை
குறுகு - அண்மைப்படுத்து
குருகினம் - பறவை இனம்
குறுகினம் - நெருங்கினோம்
குரை - சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை
குறை - குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை
குரு - ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம்
குறு - குறுகு
கூரல் - ஒரு மீன், பறவை இறகு
கூறல் - சொல்லுதல், விற்றல்
கூரை - சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில்
கூறை - புது ஆடை, சீலை
கூரிய - கூர்மையான
கூறிய - சொன்ன
கூர - குளிர்ச்சி மிக
கூற - சொல்ல, வேண்டல்
கோரல் - கூறுதல்
கோறல் - கொல்லல்
கோரை - புல்வகை
கோறை - குவளை, பொந்து
கோரல் - சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம்
கோறல் - குளிர் காற்று, மழை
சிரை - சிரைத்தல், முடிநீக்கல்
சிறை - சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.