
கம்பர் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதற்கான சான்றுகள் வருமாறு:
""ஆவின்கொடைச் சகரர் ஆயிரத்துநூறு ஒழித்து''
""எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு''
என்னும் இரு செய்யுள்களில் (தனிப்பாடல்கள்) முதல் செய்யுளுக்கு சாதவாகன சகாப்தம் ஆயிரத்து நூறு (கி.பி.1178) என்றும், இரண்டாவது செய்யுளுக்கு சாதவாகன சகாப்தம் எண்ணூற்று ஏழு (கி.பி.885) என்றும் பொருள் கொள்ளலாம்.
÷"úக்ஷத்திர சூடாமணி' என்னும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்டது சீவகசிந்தாமணி. úக்ஷத்திர சூடாமணி கி.பி. 898-இல் இயற்றப்பட்டது. ஒரு நூலில் உள்ள கருத்துகள் இன்னொரு நூலில் இடம்பெற வேண்டும் என்றால், அந்நூல் குறைந்தது இரு நூற்றாண்டுகள் மக்களிடையே பரவி, பாராட்டப்பட்டிருக்க வேண்டும். திருத்தக்கதேவரை விட விருத்தப்பாவை சிறப்பாகக் கையாண்டவர் கம்பர். அதனால் கம்பராமாயணம் 12-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் அவர் கையாண்ட ஓர் உத்தியை கம்பர் தமது இராமாயணத்திலும் கையாண்டுள்ளார். இதனால் கம்பராமாயணம் பெரியபுராணத்திற்குப் பின்னையது என்பது தெளிவாகிறது.
÷""சென்னி நாட்டெரியல் வீரன் தியாகமா விநோதன் பொன்னி நாட்டு'' (மருந்துமலைப் படலம்-58) என்று தம் காலத்து மன்னரைக் கம்பர் போற்றுகிறார். "தியாகமா விநோதன்' என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனின் சிறப்புப் பெயர். இவனுடைய ஆட்சிக்
காலம் கி.பி. 1178-1216 ஆகும்.
÷ஒட்டக்கூத்தர், கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளலின் தந்தை
சங்கரன் என்ற சிற்றரசனிடம் உதவியாளராக இருந்தவர். கூத்தரின்
சிறப்பை அறிந்த காங்கேயன் என்பவன் அவரை உயர் பதவியில்
அமர்த்தினார். புதுவைக்கு அருகில் இருந்த திரிபுவனம் என்னும்
ஊரில் இருந்த சோமன் என்பவரும் கூத்தரை ஆதரித்தார்.
÷ஒட்டக்கூத்தர், விக்கிரசோழன் (கி.பி.1118-1135), இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1135-1150), இரண்டாம் இராஜராஜன் (கி.பி.1150-1173) ஆகிய மூன்று மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் அரசவைப் புலவராக இருந்துள்ளார். கம்பர் ஒட்டக்கூத்தருக்குப் போட்டியாக இருந்ததாக வரலாறு இருப்பதால், கம்பர் வாழ்ந்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். புதுவையைச் சேர்ந்த சடையப்பன் என்னும் சரராமன் என்பவரால் ஆதரிக்கப்பட்டவர் கம்பர்.
÷தமிழ் இலக்கிய வரலாற்றில் பல சடையப்ப வள்ளல்கள் காணப்படுகின்றனர். கம்பவர்மனுக்கு உதவிய சடையப்ப முதலியார், ஒட்டக்கூத்தரை ஆதரித்த சடையப்ப சங்கரன், கம்பரை ஆதரித்த சடையப்ப சரராமன் என்பவர்கள் மூவரும் வேறு வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். சடையப்பன் என்னும் பெயரை வைத்து கம்பர் வாழ்ந்த காலத்தை நிறுவ முடியாது.
÷சி.கே.சுப்பிரமணிய முதலியார், ""ஆசிரியர் (சேக்கிழார்) வாழ்ந்த காலம் குலோத்துங்கன் (இரண்டாம்) - (அநபாயன்) காலம் என்பது இப்போது ஆராய்ச்சியாளர் பலரும் கொள்ளும் கொள்கை. அஃது இப்போதைக்கு (கி.பி.1950) எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகும். கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார் ஆசிரியர் காலத்துக்கு முன்பும், ஒட்டக்கூத்தர் அவர் காலத்து உடனாகவும், கம்பர் அவர் காலத்துக்குப் பின்னரும் வாழ்ந்திருந்தனர் என்னலாம்'' என்று கூறியுள்ளார். இம் மன்னனின் காலம் கி.பி.1133-1150.
÷இவை தவிர, கம்பர் தமது இராமாயணத்தில் கையாண்டுள்ள பல சொற்களும், அணிகளும், கி.பி.12-ஆம் நூற்றாண்டையும் அதற்குப் பின் ஆன காலத்தையும் சார்ந்தவை என்பதை நிரூபிக்கின்றன. ஆகவே, கம்பர் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது தெளிவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.