வரதட்சிணை!

ஓரு காலத்தில் வரன் கொடுத்ததே வரதட்சிணையாக இருந்தது. பெண்ணைப் பெற்றவர் தன் மகளைத் திருமணம் ஆகும் வரை பராமரித்து, திருமணத்தின்போது அவளை வரன் கையில் ஒப்படைக்கிறார். தனக்கு மனைவியாகப் போகிறவளை இவ்வளவு கால
வரதட்சிணை!
Published on
Updated on
1 min read

ஓரு காலத்தில் வரன் கொடுத்ததே வரதட்சிணையாக இருந்தது. பெண்ணைப் பெற்றவர் தன் மகளைத் திருமணம் ஆகும் வரை பராமரித்து, திருமணத்தின்போது அவளை வரன் கையில் ஒப்படைக்கிறார். தனக்கு மனைவியாகப் போகிறவளை இவ்வளவு காலமாக வளர்த்ததற்காகத் தன்னால் முடிந்த அளவு பொருளை பெண்ணைப் பெற்றவர்களுக்கு வரன் கொடுக்கும் தட்சிணையே "வரதட்சிணை' எனப்பட்டது.

திருஞானசம்பந்தர், வரதட்சிணை மணமகனால் கொடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்றை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். சம்பந்தப் பெருமான் "திருமருகல்' என்ற சிவத்தலத்திற்கு வந்தார். அங்கு ஓர் ஆண் மகனின் பிணத்துக்கருகே ஒரு பெண் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டார். சம்பந்தர் அப் பெண்ணிடம், ""நீ யார்? ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.

அந்தப் பெண், வைப்பூருக்குத் தலைவனான தாமன் என்பவரின் 7-ஆவது மகள் என்றும், எதிரில் பிணமாகக் கிடப்பது தன் தந்தையின் மருமகன் என்றும் கூறினாள். ""என் தகப்பனாருக்கு நாங்கள் 7 பெண்கள். என் தகப்பனார் என் மூத்த சகோதரியை இவருக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறி இவரிடமிருந்து தட்சிணையாகப் பொருள் பெற்றுக் கொண்டார். ஆனால், அவளை வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இவர் என் தந்தையாரிடம் இது பற்றிக் கேட்டதற்கு, ""இரண்டாவது பெண்ணை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்'' என்று கூறிவிட்டார். அவளையும் வேறு ஒருவருக்கு மணம் செய்து கொடுத்து விட்டார். இவ்வாறே 6 பெண்களையும் வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.

என் தந்தை சொன்ன சொல் தவறினார் என்ற அவச்சொல் ஏற்படக்கூடாது என்பதற்காக நானே இவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தீர்மானித்து இங்கு அழைத்து வந்தேன். ஆனால், இவர் பாம்பு கடித்து இறந்துவிட்டார். இவரை இழந்துவிட்டதற்காகத்தான் வருந்தி அழுது கொண்டிருக்கிறேன்'' என்று விவரமாகக் கூறினாள் அந்தப் பெண்.

""வளம் பொழில் சூழ் வைப்பூர்க் கோன் தாமன் எந்தை

மருமகன் மற்றிவனவற்கு மகளிர் நல்ல

இளம்பிடியார் ஓரெழுவர் அவரின் மூத்தாள்

இவனுக்கென்றுரை செய்தே ஏதிலானுக்கு

உளம் பெருகத்தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்

ஓரொருவராக ஏனையொழிய ஈந்தான்

தளர்ந்தமியும் இவனுக்காகத் தகவு செய்தங்கு

அவரை மறைத்து இவனையே சார்ந்து போந்தேன்''.

இதன் மூலம், மணமகனிடமிருந்து தட்சிணை பெற்றுக் கொண்டதை மேற்கண்ட ஞானசம்பந்தர் பாடல் மூலம் அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com