(ல, ழ, ள பொருள் வேறுபாடு)
பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
பாலி - பொய், வஞ்சகம், ஒப்பு
பாளி - இனிப்புப் பண்டம்
பாலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பாழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல்,பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு, வெற்பு
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது, பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மôளை - புளியம்பட்டை
மôல் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
மôள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)
மல்ல - மென்று தின்பது
மள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.