தீயை அணைக்கலாமா..?

தீயணைப்பு என்பது தவறான சொல். தீயவிப்பு நிலையம், தீயவிப்பு வண்டி என்றே
Updated on
1 min read

தமிழ் நாட்டுத் தீயணைப்பு நிலையங்கள், தீயணைப்பு வண்டிகளைக் காண்கிறோம். அன்புடையாரை அணைக்கலாம்; தீயை அணைத்தால் தற்கொலையில்தான் முடியும். தீயணைப்பு என்பது தவறான சொல். தீயவிப்பு நிலையம், தீயவிப்பு வண்டி என்றே எழுதுதல் வேண்டும்.

÷நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர்,

""எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில்

கொள்ளிவைத் தாற்போல் கொடிதெனினும் - மெள்ள

அறிவென்னும் நீரால் அவித்தொழுகல் ஆற்றின்

பிறிதென்னும் வேண்டா தவம்''

என்றே பாடியுள்ளார். கலித்தொகையில் (144) பின் வரும்

""ஓஓ கடலே ஊர்தலைக் கொண்டு கனலும்

கடுந்தீயுள் நீர்பெய்தக் காலே சினந்தணியும்''

என்னும் அடிகளுக்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர் "கடலே! ஊரையெல்லாம் தனக்கு உள்ளாக்கிக் கொண்டு காந்தும் கடிய நெருப்புத் தன்னை அவிக்கும் நீரைச் சொரிய சினம் மாறும்' என்று "அவிக்கும்' என்ற சொல்லையே சரியாகப் பயன்படுத்தியுள்ளார். பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் நீக்க முடியாத அளவில் இன்று சொற்குற்றங்களும் பொருள் குற்றங்களும் இருவகை வழக்கிலும் இடம்பெற்று வளர்கின்றன.

÷இனி தீயை அணைக்க - தீயணைப்பு (ஆரத்தழுவுதல்)  வேண்டாம்; தீயை அவிப்போம்! அரசு இதற்குத் தீர்வு காணும் நாள்

எந்நாளோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com