மயங்கொலிச் சொற்கள்

(ர, ற பொருள் வேறுபாடு)
Updated on
1 min read

அர - பாம்பு

அற - தெளிய, முற்றுமாக

அரவு - பாம்பு

அறவு - அறுதல்,

தொலைதல்

அரம் - ஒரு கருவி

அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்

அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன்

அறி - அறிந்துகொள்

அரிய - கிடைத்தற்கு

அரிதான, கஷ்டமான

அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள

அரன் - சிவன்

அறன் - தர்மம்,

அறக்கடவுள்

அரிவை - பெண் (7

பருவத்துள் ஒன்று. 18

வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)

அறிவை - அறிவாய்

அருகு - புல்வகை

(அருகம்புல்)

அறுகு - அண்மை

அக்கரை - அந்தக் கரை

அக்கறை - ஈடுபாடு

அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்

அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை

அரைதல் - தேய்தல்

அறைதல் - அடித்தல், சொல்லுதல்

அப்புரம் - அந்தப் பக்கம்

அப்பறம் - பிறகு

அர்ப்பணம் - உரித்தாக்குதல்

அற்பணம் - காணிக்கை செலுத்துதல்

அரு - உருவமற்றது

அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு

அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது

அறுமை - நிலையின்மை, ஆறு

ஆரு - குடம், நண்டு

ஆறு - ஒரு எண், வழி,

சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை

ஆர - நிறைய, அனுபவிக்க

ஆற - சூடுஆற(குறைய)

ஆரல் - ஒருவகை மீன்

ஆறல் - சூடு குறைதல்

இரத்தல் - யாசித்தல்

இறத்தல் - இறந்துபோதல், சாதல்

இரகு - சூரியன்

இறகு - சிறகு

இரக்கம் - கருணை

இறக்கம் - சரிவு, மரணம்

இரங்கு - கருணைகாட்டு

இறங்கு - கீழிறங்கி வா

இரவம் - இரவு

இறவம் - இறால் மீன்

இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்

இறவி - இறத்தல்

இரவு - இரவு நேரம், யாசித்தல்

இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com