(ல, ழ, ள பொருள் வேறுபாடு)
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு -
கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி -
தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை -
கொல்லன் உலை, நீருலை
உழை -
பாடுபடு, பக்கம், கலைமான்
உளை -
பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை -
மீன்வகை
எல் -
கல், மாலை, சூரியன்
எள் -
எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி -
சப்தம், நாதம், காற்று
ஒழி -
அழி, தவிர், கொல், துற
ஒளி -
வெளிச்சம்,
மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் -
அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் -
போர், அமளி, இரைச்சல்
கழகம் -
சங்கம்,
கூட்டமைப்பு
கழங்கம் -
கழங்கு,
விளையாட்டுக் கருவி
களங்கம் -
குற்றம், அழுக்கு
கலி -
கலியுகம், பாவகை, சனி
கழி -
கோல், மிகுதி,
உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை -
ஆண்மான்,
சந்திரன், கல்வி
கழை -
மூங்கில், கரும்பு, புனர்பூசம்
களை -
அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் -
மலை, பாறை,
சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் -
இடம்,
போர்க்களம், இருள்
காலி -
ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை -
பொழுது,
விடியற்பொழுது
காளை -
காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் -
எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி -
கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
கிளி -
பறவை,
வெட்டுக்கிளி
கிழவி -
முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.