மயங்கொலிச் சொற்கள்

Published on
Updated on
1 min read

மயங்கொலிச் சொற்கள் (ல, ழ, ள பொருள்  வேறுபாடு)

குலி - மனைவி

குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு

குளி -நீராடு

குலம் -ஜாதியின் உட்

பிரிவு, இனம், குடி

குளம் -நீர்நிலை,

கண்மாய், ஏரி

குலை - கொத்து, மனம் தடுமாறுதல்

குழை - குண்டலம், குழைந்துபோதல்

குலவி - மகிழ்ந்திருத்தல்

குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்

குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி

குலிகம் -சிவப்பு, இலுப்பை

குளிகம் -மருந்து,

மாத்திரை

குவலை -துளசி, கஞ்சா

குவளை - குவளை மலர், சொம்பு,

ஒரு பேரெண்

கூலம் - தானியம்,

கடைத்தெரு

கூளம் - குப்பை

கூலி - ஊதியம்

கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர்,

ஏவலாளர்

கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்

கொ ழு - மழு, கலப்பையில்

மாட்டும் பெரிய இரும்பு, கொழு

கொழுத்து இருத்தல்

கொ ளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்

கொலை - கொல்லுதல்

கொ ளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்

கொ ல்லாமை - கொலை செய்யாமை

கொ ள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,

அடங்காமை

கொ ல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை

கொ ள்ளி - கொள்ளிக்கட்டை

கொ ல்லை - புழக்கடை, தரிசுநிலம்

கொ ள்ளை - திருடுதல், மிகுதி

கோ லம் - அழகு,

அலங்காரம்

கோ ளம் - உருண்டை,

வட்டம்

கோ லை - மிளகு

கோ ழை - வீரமற்றவன், கபம்

கோ ளை - குவளை, எலி

கோ ல் - மரக்கொம்பு,அம்பு, குதிரைச்

சம்மட்டி, தண்டு,

யாழ்நரம்பு

கோள் - கிரகம்

கோ லி - இலந்தை,

விளையாடும் குண்டு

கோ ழி - உறையூர்,

விட்டில், பறவை

கோ ளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com