மயங்கொ-ச் சொற்கள்

உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை

(ர, ற பொருள் வேறுபாடு)

உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை

உறு - மிகுதி

உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல்

உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்

உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்

உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை

உரைப்பு - தங்குதல், தோய்தல்

உறைப்பு - காரம், கொடுமை

உரையல் - சொல்லல்

உறையல் - மாறுபாடு, பிணக்கு

உரிய - உரிமையான

உறிய - உறிஞ்ச

ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை

ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு

ஊரு - அச்சம், தொடை

ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை

எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம்

எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்

ஏர - ஓர் உவமஉருபு

ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)

ஏரி - நீர்நிலை, குளம்

ஏறி - உயர்ந்த, மேலே ஏறி

ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு

ஒறு - தண்டி, அழி, இகழ்

ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்

ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்

ஒருவு - நீங்கு

ஒறுவு - வருத்தம், துன்பம்

கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது

கறடு - தரமற்ற முத்து

கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை

கறம் - கொடுமை, வன்செய்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com