சொல்லலங்காரம்

தமிழில் "சொல்லலங்காரம்' என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன.
Updated on
1 min read

தமிழில் "சொல்லலங்காரம்' என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, 1935-ஆம் ஆண்டு திருநெல்வேலி சு. முத்தையாபிள்ளை என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, "இரு சொல்லலங்காரம், முச்சொல்லலங்காரம்' என்ற ஒரு கையடக்க அளவிலான வெளியீடாக வெளிவந்துள்ளது. திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதி விலாச அச்சகத்தில் அச்சான இந்நூலின் விலை ஓர் அணா. அதிலிருந்து சில...

இரு சொல்லலங்காரம்

அந்தணர் சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்?  - மறையினால்!

அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்? - தீயிட்டதால்!

எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்? - பாலற்று!

குரல் நெருங்கிப் பேசுவதேன்? கோதையர் காது சிறப்பதேன்? - கம்மலினால்!

திங்கள் வருவதேன்? திருவிளக்கேற்றுவதேன்? - ஞாயிறு போவதால்!

முச்சொல்லலங்காரம்

எழுதிப் பாராதான் கணக்கும், உழுது விதையாதான் செல்வமும், அழுது புரண்ட மனையாளும், இம்மூன்றும் - கழுதை புரண்ட களம்!

ஆறு நேரான குளமும், அரசரோடேறுமாறான குடியும், புருஷனைச் சீறுமாறான பெண்டிரும் இம்மூன்றும் - நீறுநீறாய் விடும்!

காலையிற் பல நூலாராயர்த் தலை மகனும், ஆலெரி போன்ற அயலானும், சாலை மனைக்கட்டிலிருக்கிற மனையாளும் இம்மூன்றும் - அஷ்டமத்திற் சனி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com