இணைந்துவந்து பொருள் தரும். பல சொற்களில் விளக்க வேண்டிய ஒரு பொருளை இணைமொழி மூலம் எளிதாக விளக்கி விடலாம். இணைமொழிச் சொற்கள் தமிழ்மொழிக்கே உரிய தனிச்சிறப்பு. கருத்தாழம்மிக்க தொடர்கள் பலவற்றை தமிழ்மொழி கொண்டுள்ளது என்பதை இணைமொழிகளைக் கொண்டே சொல்லிவிடலாம்.
இணைமொழிச் சொற்கள் சிலவற்றைக் காண்போம்:
அக்கம் பக்கம் - நான்கு பக்கமும்
அறம்மறம் - புண்ணியமும் பாவமும்
அரைகுறை - முற்றுப் பெறாமை
அணைதுணை - உதவி
அட்டமும் ஓட்டமும் - பெருமுயற்சி
அற்ப சொற்பம் - மிகக் கொஞ்சம்
அல்லும் பகலும் - நாள் முழுவதும்
அன்பும் அருளும் - பாசமும் பக்தியும்
அருமை பெருமை - சிறப்பு
ஆதி அந்தம் - தொடக்கமும் முடிவும்
ஆடை ஆபரணம் - உடை அணி
இன்ப துன்பம் - சுகதுக்கம்
இடைக்கிடை - சரிநிகர்
இடக்கு முடக்கு - சங்கடம்
உ ள்ளும் புறமும் - உள்ளேயும்
வெளியேயும்
உயர்வு தாழ்வு - ஏற்றத்தாழ்வு
உற்றார் உறவினர் - சுற்றத்தார்
ஊண்உறக்கம் - உணவும் உறக்கமும்
எலும்பும் தோலும் - மிக மெலிவு
ஏச்சுப் பேச்சு - வசைமொழி
ஏழை எளியவர் - மிக வறியவர்
ஏற்றம் இறக்கம் - உயர்வு தாழ்வு
ஒப்பும் உயர்வும் (ஒப்புயர்வு) - தகுதி
ஓய்வு ஒழிவு - நேரமின்மை
கண்ணும் கருத்தும் - ஆவல்
க ணக்கு வழக்கு - கணக்கு
வைத்திருத்தல்
கட்டித்தழுவி - இறுக அணைத்தல்
கட்டைநெட்டை - சிறிது பெரிது
க ண்ணீரும் கம்பலையும் - கவலை, வருத்தம்
கங்குகரை - எல்லை
குண்டும் குழியும் - மேடுபள்ளம்
கையும் மெய்யும் - அத்தாட்சியாக
சீரும் சிறப்பும் - மிகச் சிறப்பாக
சீவிச் சிங்காரித்து - அலங்கரித்து
கொஞ்ச நஞ்சம் - சிறிய அளவு
நன்மை தீமை - நல்லது கெட்டது
நோய் நொடி - மிகக்கடுமை
பாரதூரம் - மிகப்பெரிய
பழக்க வழக்கம் - ஒழுக்கமுறை
பெயரும் புகழும் - கீர்த்தி
புல் பூண்டு - சிறுகொடிகள்
மந்திர தந்திர - மாயம்
மிச்சம்மீதி - சொற்பம்
வாடி வதங்கி - காய்ந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.