மயங்கொலிச் சொற்கள்

Published on
Updated on
1 min read

(ர, ற பொருள் வேறுபாடு)

பாரை - கடப்பாரை

பாறை - கற்பாறை

பிரை - உறைமோர், பயன்

பிறை - பிறைச்சந்திரன்

பீரு - புருவம்,

அச்சமுள்ளோன்

பீறு - கிழிவு

புரம் - மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம்

புறம் - இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி,

பின்புறம், முதுகு

புரவு - கொடை, நிலம், செழுமை, காத்தல்,

அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம்

புறவு - காடு, புறா

பெருக்கல் - நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல்,

மிகுவித்தல்

பெறுக்கல் - அரிசி,

மிகுத்தல்

பொரி - நெற்பொரி,

பொரிதல்

பொறி - தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு

பொரித்தல் - வறுத்தல், குஞ்சு பொரித்தல்

பொறித்தல் - எழுதுதல்,

தீட்டுதல், பதித்தல், அடையாளமாக

வைத்தல்

பொருப்பு - மலை, பக்கமலை

பொறுப்பு - பாரம், பொறுமை

பொரு - போர்

பொறு - பொறுத்திரு

மரத்தல் - விறைத்தல்

மறத்தல் - மறதி, நினைவின்மை

மரம் - தாவர வகை, மூலிகை, மரக்கலம்,

பறைவகை

மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம்.

மரி - விலங்குகளின் குட்டி

மறி - தடை செய்

மரித்தல் - இறத்தல், சாதல்

மறித்தல் - தடுத்தல்,

திரும்புதல், அழித்தல்.

மரை - மான்

மறை - வேதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com