விநாடியா? நொடியா?

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 30000 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு விடுவிக்கப்படுகிறது' - இது போன்ற செய்திகளைப் பத்திரிகைகளில் படிக்கவும், தொலைக்காட்சிகளில் கேட்கவும் நேரிடுகிறது.
Published on

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 30000 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு விடுவிக்கப்படுகிறது' - இது போன்ற செய்திகளைப் பத்திரிகைகளில் படிக்கவும், தொலைக்காட்சிகளில் கேட்கவும் நேரிடுகிறது.

இச் செய்தியில் குறிப்பிடப்படும் "ஒரு விநாடி' என்பது "ஒரு செகண்டு' என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், "செகண்டு' என்னும் கால அளவுக்குத் தமிழில் "நொடி' என்பதே சரியானச் சொல்லாக அமையும். ஏனெனில், ஒரு விநாடி என்னும் கால அளவு 24 நொடி அதாவது, 24 செகண்டுக்குச் சமமாகிறது.

ஒரு நொடியில் வெளியேற்றப்படும் நீரின் அளவை ஒரு விநாடியில் அதாவது, 24 நொடிகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவாகக் குறிப்பிடுவது எத்துணை பெரிய வேறுபாட்டை உண்டாக்குகிறது!

60 நொடிகள் - 1 நிமிடம்; 60 நிமிடங்கள் - 1 மணி; 24 மணி - 1 நாள்; 60 விநாடி - 1 நாழிகை; 60 நாழிகை - 1 நாள்.

எனவே, 1 விநாடி என்பது 24 நொடிகளைக் குறிக்கும். இனியேனும் மேற்படி செய்தி ஊடகங்கள் "செகண்டு' என்னும் கால அளவுக்கு "விநாடி' என்று குறிப்பிடுவதைத் தவிர்த்து "நொடி' என்னும் சொல்லையே பயன்படுத்துவதுதான் சிறப்பாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com