

இன்றைக்கு மருந்துகள் வாங்கும்போது காலாவதி ஆகாத மருந்தா (உஷ்ல்.ஈஹற்ங்) எனப் பார்த்து வாங்க வேண்டும் என்கிறது நவீன மருத்துவ அறிவியல். இந்த அறிவியல் உண்மையைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே "தமிழ் மூதாட்டி' ஒüவையார் தமது பாடலில், ""ஏவா மக்கள் மூவா மருந்து'' (கொன்றை வேந்தன்-பா.8) எனக் கூறியுள்ளார். இதன் பொருளாவது: சொல்லாமல் உதவி செய்கிற பிள்ளைகள், உண்டவுடன் நோய் தீர்க்கும் மூப்படையாத (உஷ்ல்.ஆகாத) மருந்துக்கு ஒப்பானவர்கள் என்பதாகும்.
இன்றைய மருத்துவ உலகம், குழந்தைக்குத் தாய்ப்பாலைவிட சிறந்த உணவு வேறில்லை என்கிறது. "தாய்ப்பால் தினம்' கொண்டாடுகிறோம். தாய்ப்பாலின் பெருமையை அன்றே உணர்ந்த ஒüவையார், ""பீரம் பேணிற் பாரம் தாங்கும்'' (கொ.வே.பா-62) என எடுத்துக் கூறியுள்ளார். அதாவது, தாய்ப்பால்(பீரம்) உண்டு வளரும் குழந்தை உறுதியுடன் வளரும் என்பது இதன் பொருள். இப்படி எத்தனையோ அறிவியல் உண்மைகளைத் தம் பாடலில் பதிவு செய்த பெருமைக்குரியவர் ஒüவையார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.