நூல்களின் வகைகள்

வல்லூறு, ஆந்தை, காகம், கரிக்குருவி, காடை முதலிய பறவைகளின் குரலையும் இயக்கத்தையும் கொண்டு, வரப்போகும்
Published on
Updated on
1 min read

சென்றவாரத் தொடர்ச்சி...

13. புள் நூல்

வல்லூறு, ஆந்தை, காகம், கரிக்குருவி, காடை முதலிய பறவைகளின் குரலையும் இயக்கத்தையும் கொண்டு, வரப்போகும் நன்மை தீமைகளைக் கணித்துக் கூறுவது புள் நூல். புள் - பறவை. புள்ளால் அறியப்படும் குறியைப் புள் என்பது ஆகுபெயர்.

14. கனா நூல்

இன்ன யாமத்தில் இன்ன பொருள் அல்லது நிகழ்ச்சி காணின், இவ்வளவு காலத்தில் இன்னது நேரும் என்று கூறும் நூல் கனா நூலாம். மதுரைத் தமிழச் சங்கம் வெளியிட்ட ஒரு கனா நூல் இன்றும் உளது.

15. உள நூல் (டள்ஹ்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ஹ்)

தனிப்பட்டவரும் தொகுதியாளருமான மக்களின் உளப் பாங்குகளை எடுத்துக்கூறுவது உள நூல். இது தொல்காப்பிய மெய்ப்பாட்டியலால் அறியப்படும். எண் சுவைகளையும் அவற்றின் நுண்ணிய வேறுபாடுகளையும், முதன் முதலில் எடுத்துக் கூறியது தமிழிலக்கணமே.

16. பூத நூல்

நிலம், நீர், தீ, வளி, வெளி என்னும் ஐம்பூதங்களின் இயல்புகளைக் கூறும் நூல் பூத நூல்.

17. நில நூல்

நிலத்தின் வகைகளையும் நிலப்படை வகைகளையும் மண்ணின் வகைகளையும் எடுத்துக் கூறுவது நில நூல்.

18. நீர் நூல்

கிணறு தோன்றுவதற்கு நீரிருக்கும் இடங்களைத் தெரிவிப்பது நீர் நூல். இது கூவ நூல் எனவும் படும்.

19. புதையல் நூல்

புதையல் இருக்குமிடங்களை அறியச் செய்வது புதையல் நூல்.

20. கோழி நூல்

இது போர்ச் சேவற் கோழிகளின் நிறங்களையும் திறங்களையும் எடுத்துக் கூறுவது.

21. பரி நூல்

இது பல்வகைக் குதிரைகளையும் பற்றிய செய்திகளையெல்லாம் விளக்கிக் கூறுவது.

22. யானை நூல்

இது யானையைப் பற்றிய செய்திகளையெல்லாம் விரிவாகக் கூறுவது.

23. வரலாற்று நூல்

முக்கழக வரலாற்றில் பாண்டியர் தொகை குறிக்கப்பட்டிருப்பதாலும், அன்றாட நடவடிக்கைகளைப் பட்டோலைப் பெருமான் எழுதிவந்ததாலும், பரணி என்னும் வாகைப் பனுவல்களில் அரச வழிமரபு கூறப்படுவதாலும், வரலாற்று நூல் ஒரு வகையில் எழுதப்பட்டு வந்தமை உய்த்துணரப்படும். மூவேந்தர் குடி வரலாற்று நூல்களும் அவர் வரலாற்றுக் கருவி நூல்களும் இறந்துபட்டன.

24. திணை நூல்

முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருளையும் பற்றிக் கூறும் திணை நூல், ஒரு வகையில் ஞால நூலை (எங்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ்) ஒக்கும்.

(ஞா.தேவநேயபாவாணரின் "பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்' நூலிலிருந்து...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com