நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம்; இன்னும் விடியவே இல்லை' என்றும், "சுதந்திரம் வாங்கினோம்; இப்போது விற்றுக் கொண்டிருக்கிறோம்' என்றும் கேலி செய்பவர்கள்கூட "பினாமி' பெயரில் சொல்லாமல் சொந்தப் பெயரில் சொல்வதற்கான சுதந்திரம் கிடைத்திருப்பதை மறுக்க முடியாது.
""பினாமி என்ற இச்சொல் ஆங்கிலச் சொல் அன்று. இச்சொல் பற்றி மூவகைக் கருத்துகள் நிலவுகின்றன. பினாமி என்பது இரு சொற்கள் சேர்ந்த ஓர் அரபுச் சொல் என்றும், பி+நாம் என்பவை "பி' என்பதற்கு "இல்லை' என்ற பொருளும் "நாம்' என்பதற்கு "பெயர்' என்ற பொருளும் உடையதாய் அமைந்து, தன்னுடைய பெயரில் இல்லாமல் மாற்றுப் பெயரில் பதிவு செய்தலே பினாமி.
இரண்டாவதாக, சொல்லாய்வறிஞர் அருளியார், பினாமி என்பது உருதுச் சொல் என்றும், அதற்குப் பொருள் கரவடிப்பெயர் / இரவல்பெயர் என்றும் தமது "அயற்சொல் அகராதி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவதாக, விக்கிப்பீடியா வலைதளம் இச்சொல் பாரசீக மொழிச் சொல் என்றும், உரிமைக்குரியவர் பெயரை மறைத்து உரியவரல்லாதார் பெயரால் பதிவு செய்யும் நடவடிக்கை என்று விளக்கமும் தந்துள்ளது.
கூடுதலாக இது இந்திச்சொல் என்று மற்றொரு வலைதளமும் பதிவு செய்துள்ளது. இது எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பொருளைத்தான் உணர்த்துகிறது'' என்று உ. தேவதாசு தெரிவித்துள்ளார்.
நல்லவேளை இந்தப் போட்டியில் தமிழ் இல்லை. தமிழ் மொழியில் பினாமி இல்லை என்பதில் ஆறுதல் பெறுவது இருக்கட்டும்; தமிழில் பினாமியைச் சொல்ல ஒரு சொல் தேவைப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
1973-இல் சட்ட ஆணையம் ஆய்வு செய்யத் தொடங்கி, 1988-இல் இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் (ஆங்ய்ஹம்ண் பழ்ஹய்ள்ஹஸ்ரீற்ண்ர்ய் (டழ்ர்ட்ண்க்ஷண்ற்ண்ர்ய்) அஸ்ரீற்) நிறைவேற்றப்பட்டும் 2011 செப்டம்பர் முதல்தான் நடைமுறைக்கு வரமுடிந்திருக்கிறது. இதுவே பினாமியின் ஆற்றலுக்கு ஒரு சான்று.
இந்தச் சட்டத்தின்படி, பினாமி பெயரில் நிலம் வாங்கவோ, நிறுவனம் தொடங்கவோ, வங்கியில் கணக்கு வைக்கவோ, சமையல் எரிவாயு பெறவோ, ஏழைகளுக்கான ஓய்வூதியம், உதவித்தொகை போன்றவற்றில் இடைத்தரகர் ஈடுபடவோ வாய்ப்பிருக்காது என்று நம்பப்பட்டது.
இப்போது 12 எண்கள் கொண்ட ஆதார் அட்டை, சமுதாயப் பாதுகாப்பினைத் தருவதற்கும் பினாமியை ஒழிப்பதற்கும் வந்துள்ளது. நம்பிக்கைதானே வாழ்க்கை! சமுதாய நம்பிக்கையைச் சீரழிக்கும் பினாமியைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?
பினாமி என்ற சொல்லுக்கு, ப. இரா.இராசஅம்சன், வானவில் மூர்த்தி, சி.இராமச்சந்திரன், உ.தேவதாசு, டி.வி. கிருஷ்ணசாமி, இரா ரெங்கசாமி, சொ.சத்தியசீலன், கோ.மன்றவாணன், என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, ஜனநேசன் ஆகியோர் தந்திருக்கும் தமிழாக்கம் பின்வருமாறு:
கொடுகொள் வேற்றாள், மாற்றுமுறையர், உரிமையல் உரியர், பொய்ப்பெயர், மாற்றுப் பெயர், பதிலாக, மாற்று, பதிலி, மாற்றாள், மறைமுகவர், பெயர் மாற்றி, உரிமைப்போலி, போலி உரிமையாளர், வெளிப்பார்வை உரிமையாளர், வெளித்தோற்ற உரிமையாளர், பெயரளவு உரிமையாளர், பெயராளி, இரவலாளர், இரவலாளி, பெயர் இரவல், பொய்ப்பெயரி, பெயரிலி, மாற்றுப்பெயரி, ஏமாற்றுப் பெயர், வேற்றுப்பெயர், மறைபெயர், மறைபெயரி, பெயர்மறை, மெய்யில்பெயர், மேவாப்பெயர், மருவாப்பெயர், உரிமைப் பெயரிலாத நபர், புனைநபர், உரிமை மாற்றாள், மெய்போல்நபர், போலிஉடைமைதாரி, பெயர்மாறாட்ட உடைமைதாரி, கரவடிப்பெயர், இரவல் பெயர்.
பினாமியாக இருப்பவர் இன்னொருவர் உடைமைக்குப் பெயரளவில் மட்டுமே உரியவராக இருக்கிறார்; ஆனால் அவர் பெயர் பொய்யில்லை.
அவர் பெயர், ஏமாற்றப் பயன்படுகிறது; அதற்காக அவர் பெயரே எமாற்றுப் பெயர் என்று சொல்ல முடியவில்லை. பினாமியில் மாற்று இருக்கிறது; ஏமாற்று இருக்கிறது.
வசதி இல்லாத ஆள் பெயரைக் கணக்கு வழக்கும் சொத்தும் வைத்திருக்க பினாமி ஆக்குகிறார்கள். ஒருவர் பெயரில் இன்னொருவர் பயன்பெறும் ஏமாற்று வேலைகளுக்குப் பினாமிக் கணக்கு, பினாமி நிலம், பினாமி நிறுவனம் ஆகியவை உருவாக்கப்படுகின்றன.
இவற்றை எல்லாம் சொல்வதற்குரிய ஒரு தமிழ்ச் சொல் வேண்டும். அது பினாமியாக இல்லாமல் இருக்க வேண்டும்.
சொ.சத்தியசீலன் "பதிலி' என்ற சொல்லைப் பரிந்துரைத்துள்ளார். பதிலி ஆளுக்கும் பொருளுக்கும் பொருந்துகிறது. பதிலியில் நன்க்ஷள்ற்ண்ற்ன்ற்ங் மட்டும் இல்லாமல், டழ்ர்ஷ்ஹ் என்பதும் அடங்குகிறது என்று தமிழ் லெக்சிகன் கூறுகிறது. பதிலிச் சேவையகம் என்றால், டழ்ர்ஷ்ண் நங்ழ்ஸ்ங்ழ்.
எனவே பதிலிச் சொத்து, பதிலிக் கணக்கு, பதிலி நிறுவனம், பதிலி ஆள் என்று சொல்வதற்கும் பதிலி வாய்ப்பாக இருக்கிறது.
BENAMI - பதிலி
அடுத்தவாரத் தேடல் - Work from home
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.