

இறவாத அறம் செய்க!
தமக்கு இன்றியமையாதோராகிய இரண்டு முதியோரும் (தாய்-தந்தை) இறந்ததைக் கண்டிருந்தும் யாரும் செல்வப் பொருளை ஒரு பொருளாகக் கருதுவார்களா? அந்தப் பொருள்களைக் கொண்டு நம் பெற்றோரை நம்மால் காப்பாற்ற முடிந்ததா? ஆதலால், ஒல்லும் வகையினால் எல்லாம் அறத்தைச் செய்ய வேண்டும். மலை ஊர்ந்தும் உருண்டும் நிலைபெயர்ந்தும் வரும்போது அதன் வழியில் சென்று அதைத் தடுக்கக்கூடியது எதுவும் இல்லை. மலை புரண்டு வருவது போன்றது இறப்பு. அதைத் தடுத்து நிறுத்த எவராலும் இயலாது. அதனால் இறப்பதற்கு முன்பே இறவாத அறத்தைச் செய்து உய்திபெற வேண்டும்.
இன்றி யமையா இருமுது மக்களைப்
பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ?
ஒன்றும் வகையான் அறஞ்செய்க ஊர்ந்துருளின்
குன்று வழிபடுப்ப தில்.(பழமொழி நானூறு - 370)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.