
சூழ்நிலை என்னும் சொல் சுற்றுப்புறத்தைக் குறிக்கிறது. உயிர்களின் சூழ்நிலை அவை வாழும் சுற்றுப்புறத்தை அடிப்படையாகக் கொண்டது. தாவரங்கள், விலங்குகள் போன்றவை அவை வாழும் சூழ்நிலையோடு கொண்டுள்ள தொடர்பு பற்றிய அறிவியல் "சூழ்நிலையியல்' எனப்படும். இச்சூழ்நிலையியலின் ஒரு பிரிவாக நக்கீரரின் நெடுநல்வாடையில் பண்பாட்டுச் சூழலியல் பொருந்தி வருவதைக் காண்போம்.
சுற்றுச்சூழலியல் ஒழுங்கமைவு : சுற்றுச்சூழல் (உய்ஸ்ண்ழ்ர்ய்ம்ங்ய்ற்) என்பது உயிரினமோ, சமூகமோ எதுவாயினும் அது வாழக்கூடிய பெüதிக, கனிம உயிரியல் கூறுகளின் ஒருங்கிணைந்த ஒரு தொகுப்பை அல்லது கூட்டமைப்பைக் குறிப்பிடுகிறது.
பண்பாட்டுச் சூழலியல் :உயிரினங்கள், உயிரற்றவை, சுற்றுச்சூழல் ஆகியவை ஒருங்கிணைந்து விளங்கும் அமைப்பு ஒருவிதமான ஒழுங்கமைப்புடன் காணப்படும். இந்த ஒழுங்கமைவை சூழலியல் ஒழுங்கமைப்பு (உஸ்ரீர் ள்ஹ்ள்ற்ங்ம்) என்பர். ஆற்றல் பாய்வு, பரிமாற்றங்கள் ஆகியவற்றின் வடிவமைக்கப்பட்ட ஏற்பாடு முறைதான் இச்சூழலியல் ஒழுங்கமைப்பு ஆகும். மனிதனை மையப்படுத்தி ஆராயும் சூழலியல் "மானிடச் சூழலியல்' (ஏன்ம்ஹய் உஸ்ரீர்ப்ர்ஞ்ஹ்) அல்லது "பண்பாட்டுச் சூழலியல்' (இன்ப்ற்ன்ழ்ங் உஸ்ரீர்ப்ர்ஞ்ஹ்) எனப்படுகிறது. அதாவது, மனிதனை உள்ளடக்கிய சூழலியல் ஒழுங்கமைப்புகளைப் பற்றி ஆராய்கிறது. அவ்வகையில் பண்பாட்டுச் சூழலியல் என்ற அறிவியல் கோட்பாட்டை நெடுநல்வாடையில் பொருத்திப் பார்க்கலாம்.
நெடுநல்வாடை காட்டும் திணை :நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை, முல்லைத் திணையை அடிப்படையாகக் கொண்டது. "வையகம் பனிப்ப...' (1-4) எனும் மங்கலச் சொல்லுடன் தொடங்குகிறது.
மலையை வலமாகச் சூழ்ந்து எழுந்த மேகம் பெருமழையைப் பொழிய அதனால் பெருகும் வெள்ளத்தால் ஆநிரை மேய்க்கும் கோவலர் தமது இருப்பிடம் விட்டு வேற்று இடம் செல்லவேண்டி இருக்கிறது என்று முல்லைத் திணைக்குரிய காரும் மலையுமாகிய முதற்பொருளையும், ஆநிரையும், கோவலரும் எனக் கருப்பொருளையும், கோவலர் வேற்று இடத்தை வெறுத்தல், இல்லிருத்தல் என உரிப்பொருளையும் பதிவுசெய்கிறது.
பண்பாட்டு நிலப்பரப்பு :முல்லைத்திணை அடிப்படையில் எழுந்த நெடுநல்வாடை அத்திணைக்குரிய நிலத்தைப் பின்னணியாகக்கொண்டு அமைந்துள்ளது. கூர் முள்ளினையுடைய கோலால் ஆநிரைகளை மேய்க்கின்ற ஆயர்கள் கூதிர்கால மழைக்கு அஞ்சி மேடான வேற்று நிலத்திற்குச் செல்கின்றனர். அவ்விடத்தில் குளிர் காரணமாக ஆநிரைகள் மேய்ச்சலை மறந்தும், பெண் குரங்குகள் குளிரால் நடுங்கியும், மரங்களில் உள்ள பறவைகள் பிடிப்பின்றி வீழ்ந்தும், பரிந்து பாலூட்டும் ஆநிரைகள் கன்றுகளைத் தள்ளியும் இருக்கின்றன.
ஊரின் வெளிப்புறக் காட்டுப்பகுதி விளக்கமுற்ற பான்மையில் ஊரின் உட்புறமும்,
""மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்'' (29-30)
என நகரமும், நகரினுள் வீடுகளும், பெரும்பெயர் மன்னர்க்குரிய அரண்களையும் ஒன்றின் ஒன்றாய் நக்கீரரால் விதந்து ஓதப்படுகிறது. இவ்வாறு முல்லை நிலமாகிய காடும் அச்சூழலில் அரசு உருவாக்கத்தில் எழுந்த அரண்மனையும் நெடுநல்வாடையின் பண்பாட்டு நிலப்பரப்பாகின்றன.
வாழிடச் சூழல் : மக்கள் வாழக்கூடிய இயற்கையான பின்னணியையே "வாழிடம்' என்ற சொல் குறிப்பிடுகிறது. அவ்வகையில் நெடுநல்வாடை கூறுகிற காடும் நகரமும் நெடுநல்வாடையின் வாழிடச்சூழல் எனலாம். இதில் இடம்பெறும் பயிரினங்கள், உயிரினங்கள், மக்கட் சமுதாயம் முதலியவற்றின் ஒருங்கிணைவு வாழிடச் சூழலாக அமைகின்றன.
நெடுநல்வாடை காட்டும் மேய்ச்சல் நிலமும், மல்லல் மூதூரின் அகல் நெடுந்தெருவும், இல்லங்களும், அரண்மனையும், பாசறையும் பண்பாட்டு நிலப்பரப்பாகும். மேய்ச்சலுக்குரிய ஆநிரைகளும், பயிரினங்களும், நகர்வாழ் மக்கட் சமுதாயமும் வாழிடச் சூழலாகின்றன. முல்லை நிலத்திற்குரிய ஆற்றியிருத்தல் வரிப்பொருளும் புறத்திணையாகிய வாகைக்குரிய பெற்றிதலும் போர் தொழிலும் சூழலியல் ஒழுங்கமைவாகும். இதில் இடம்பெறும் மரபுகள், பண்பாடுகள் பண்பாட்டுச் சூழலியல் சார்ந்த அணுகுமுறைகளுக்கு இடமளித்து பழந்தமிழர் வாழ்வியல் முறையை விளக்க முற்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.